மத்திய அரசின் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்புக்காக கோடிக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி, அக நிவாரணப்படி, வீட்டு வாடகை கொடுப்பனவு உள்ளிட்ட பல சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பண்டிகை காலம் நெருங்கி வருவதால் மத்திய அரசின் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்புக்காக கோடிக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். மத்திய அரசு எப்போது வேண்டுமானாலும் அகவிலைப்படி உயர்வை அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியான வண்ணம் இருக்கின்றன. அதன்படி நவராத்திரிக்குப் பிறகு அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்த சரியான தேதி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.
அகவிலைப்படி எத்தனை சதவீதம் உயரும்?
undefined
இந்த முறை அகவிலைப்படியை 3% உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம் தற்போது 45 சதவீதமாக இருக்கும் அகவிலைப்படி 45%ஆக உயரும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஒவ்வொரு மாதமும் தொழிலாளர் பணியகத்தால் வெளியிடப்படும் தொழில்துறை தொழிலாளர்களுக்கான சமீபத்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையில் அகவிலைப்படி உருவாக்கப்படுகிறது என்பதை மத்திய அரசு ஊழியர்கள் கவனிக்க வேண்டும். சமீபத்திய தரவுகளின்படி, ஜூலை 2023க்கான அகில இந்திய CPI-IW 3.3 புள்ளிகள் அதிகரித்து 139.7 ஆக இருந்தது. 1-மாத சதவீத மாற்றத்தில், குறியீட்டு எண் முந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது 2.42 சதவீதம் அதிகரித்துள்ளது.
வங்கியை போலவே தபால் அலுவலகத்திலும் லோன் வாங்கலாம்.. எப்படி தெரியுமா.? முழு விபரம் இதோ !!
சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்?
அகவிலைப்படி 3% உயர்த்தினால், மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் உயரும். ஒரு ஊழியரின் சம்பளம் மாதம் ரூ 50,000 மற்றும் அடிப்படை ஊதியமாக ரூ 15,000 இருந்தால், அவர் தற்போது ரூ 6,300 அகவிலைப்படியாக பெறுகிறார், இது அடிப்படை ஊதியத்தில் 42 சதவீதம் ஆகும். இருப்பினும், எதிர்பார்க்கப்படும் 3 சதவீத உயர்வுக்குப் பிறகு, அகவிலைப்படி மாதத்திற்கு ரூ.6,750 ஆக அதிகரிக்கும், இது முன்பை விட ரூ.450 அதிகமாகும். எனவே, ஊழியர் அடிப்படை ஊதியமாக ரூ.15,000 உடன் மாதம் ரூ.50,000 சம்பளம் பெற்றால், அவருடைய சம்பளம் மாதம் ரூ.450 உயரும்.
இப்போது ஊழியர்களுக்கு எவ்வளவு DA வழங்கப்படுகிறது?
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியும், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அகவிலை நிவாரணமும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக, ஜனவரி மற்றும் ஜூலை என ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் உயர்த்தப்படுகிறது. தற்போது, ஒரு கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 42 சதவீத அகவிலைப்படியைப் பெறுகின்றனர்.
விநாயகர் சதுர்த்தி சர்ப்ரைஸ்.. அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.. முழு விபரம் இதோ !!
முன்னதாக கடந்த மார்ச் மாதம் அகவிலைப்படியை மத்திய அரசு 4 சதவீதம் அதிகரித்ததால் அது 42 சதவீதமாக இருந்தது. தற்போதைய பணவீக்க விகிதத்தைப் பார்க்கும்போது, அடுத்த அகவிலைப்படி உயர்வு 3 சதவீதமாக இருக்கும் என பல்வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.