
தேர்தலுக்கான செலவு 20,000 ரூபாய் மட்டும் தான் ...! தலைமை தேர்தல் ஆணையம் அதிரடி ....!!!
தேர்தலில் கருப்பு பணத்தை ஒழிக்கும் பொருட்டு, தேர்தல் செலவுக்காக வேட்பாளர்கள் செலவிடும் தொகைக்கு , தலைமை தேர்தல் ஆணையம் ஆணையிட்டுள்ளது.
அதன்படி, ரூபாய் நோட்டு மதிபிழத்தல் ( கருப்பு பண ஒழிப்பு ) பின், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்கள் சட்டப்பேரவை தேர்தலை பிப்ரவரி மாதம் முதல் பல கட்டங்களாக நடைபெறவுள்ளது.
இதனை தொடர்ந்து தற்போது, வெறும் 20,000 ஆயிரம் மட்டும் தான் , வங்கி கணக்கில் இருந்த எடுக்க முடியும் என்றும், அதற்கு மேல் வேண்டும் என்றால், காசோலையை பயன்படுத்திதான் எடுக்க வேண்டும் என , தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும், உத்திர பிரதேசம் , பஞ்சாப் , உத்தரகண்ட் ஆகிய மாவட்டங்களில் – 28 லட்சம் வரையிலும்
மணிப்பூர் , கோவா மாநிலம் - 20 லட்சம் வரை மட்டுமே , தேர்தலுக்காக பயன்படுத்த வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.