2024-25-ம் ஆண்டுக்கான பட்ஜெட் சட்டபேரவையில் இன்று நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார். நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இதுவாகும்.

11:35 PM (IST) Feb 19
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் போன்றவை மீண்டும் தமிழகத்திற்கு திரும்புகிறது. இதுதொடர்பான செய்தி தற்போது வெளியாகி உள்ளது.
11:00 PM (IST) Feb 19
குறைந்த பட்ஜெட் உள்ள மக்களுக்காக, Infinix Hot 40i ஸ்மார்ட்போன் 16 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பகத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
09:56 PM (IST) Feb 19
யுபிஐ பேமெண்ட்கள் வசதியாகவும், விரைவாகவும் ஸ்மார்ட்போனிலிருந்து செய்யப்படுகிறது. ஆனால் சில சமயங்களில் தவறான எண்ணுக்கு பணத்தை அனுப்புவது பலருக்கும் தொல்லையாகிறது. இதனை சரி செய்து, பணத்தை திரும்ப பெறுவது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.
08:32 PM (IST) Feb 19
கூகுள் பணியாளரைத் தக்கவைக்க 300% சம்பள உயர்வை வழங்குகிறது. இதுதொடர்பான தகவல் வெளியாகி உள்ளது.
07:52 PM (IST) Feb 19
ரயில் டிக்கெட் ரத்து செய்யப்பட்டால் எவ்வளவு பணம் திரும்ப கிடைக்கும் என்பதை ரயில்வே பயணிகள் தெரிந்து கொள்வது அவசியம். இது தொடர்பான அப்டேட் வெளியாகி உள்ளது.
07:24 PM (IST) Feb 19
அந்தமான் மற்றும் நிக்கோபார் டூர் பேக்கேஜ்களை ஐஆர்சிடிசி அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
07:14 PM (IST) Feb 19
நிறைவேற்ற வேண்டிய பல நல்ல பணிகள் எஞ்சியிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
05:58 PM (IST) Feb 19
தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த கடன் ரூ.8.33 லட்சம் கோடியாக அதிகரித்தது தான் திமுக அரசின் சாதனை என பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்
05:24 PM (IST) Feb 19
லூனா எலக்ட்ரிக் வாகனத்தை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 110 கிலோமீட்டர்கள் ஓடும். லூனாவின் அம்சங்கள் மற்றும் விலை பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
04:16 PM (IST) Feb 19
ஜார்க்கண்ட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என முதல்வர் சம்பய் சோரன் அறிவித்துள்ளார்
03:59 PM (IST) Feb 19
புதிய வாக்காளர்களை உறுப்பினர்களாக சேர்க்க கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என தமிழக வெற்றிக் கழகம் தெரிவித்துள்ளது
03:32 PM (IST) Feb 19
தமிழக பட்ஜெட்டில் வளர்ச்சித் திட்டங்கள் எதுவும் இல்லை என எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்
02:48 PM (IST) Feb 19
பெண் பத்திரிக்கையாளர்களை தரக்குறைவாக விமர்சித்து பேஸ்புக்கில் பதிவிட்ட வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
02:25 PM (IST) Feb 19
தமிழ்நாடு பட்ஜெட் நாளை முதல் நனவாக வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
02:03 PM (IST) Feb 19
02:02 PM (IST) Feb 19
பட்ஜெட்டை குறை சொல்ல முடியாது ஆனாலும் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத பட்ஜெட் என காவிரி நீர்ப் பாசன விவசாயிகள் நலச்சங்கம் தெரிவித்துள்ளது.
01:56 PM (IST) Feb 19
01:55 PM (IST) Feb 19
01:46 PM (IST) Feb 19
தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்கள், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர்கள் போன்ற 500க்கும் மேற்பட்ட நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு அளிக்கும் புதிய தொழில் நிறுவனங்களுக்கு அவர்களின் ஊதியத்தில் 10 சதவீதம் ஊதிய மானியம் இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும். பணிபுரியும் மகளிரின் மழலைக் குழந்தைகளின் நலன் காக்க, அனைத்து சிப்காட் தொழிற்பேட்டைகளிலும் குழந்தைகள் காப்பகங்கள் தொடங்கப்படும் .
01:45 PM (IST) Feb 19
முதல்வரின் தாயுமானவர் வறுமை ஒழிப்புத் திட்டம் அறிமுகம். தமிழக பட்ஜெட்டில் முதல்வரின் தாயுமானவர் திட்டம் செயல்படுத்த 27,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வறுமையை அகற்றிட முதல்வரின் தாயுமானவர் வறுமை ஒழிப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்திற்காக 27,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
01:38 PM (IST) Feb 19
12:46 PM (IST) Feb 19
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் IIன் கீழ் 2024- 25 ஆம் ஆண்டில் 2,482 கிராம ஊராட்சிகளில் 1,147 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்
ஊரகப் பகுதிகளில் உள்ள பழைய மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிகளுக்கு பதிலாக 365 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2,000 புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் இந்தாண்டு அமைக்கப்படும்
முதல் தலைமுறை தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வரும் நிதியாண்டில் 101 கோடி ரூபாய் அளவிற்கு மானிய உதவி அளிக்க நிதி ஒதுக்கப்படும்
12:13 PM (IST) Feb 19
42 கிமீ நீளமுள்ள அடையாறு ஆறு ரூ.1,500 கோடி செலவில் சீரமைக்கப்படும் என தமிழக பட்ஜெட் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தஞ்சாவூரில் 120 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிப்காட் சொல்லி பூங்கா அமைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
12:09 PM (IST) Feb 19
திருக்குறளுடன் தொடங்கிய உரையை திருப்பாவையை மேற்கொள் காட்டி நிறைவு செய்துள்ளார் நிதி அமைச்சர் தங்ககம் தென்னரசு.
"உற்றோமே யாவோம் உமக்கே நாம் ஆட்செய்வோம்" என்ற திருப்பாவை வரியைக் கூறி முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியை நினைவுகூர்ந்து தனது முதல் பட்ஜெட் உரையை முடித்திருக்கிறார்.
12:02 PM (IST) Feb 19
தமழ்நாடு அரசின் சொந்த வருவாய் ரூ.1.95 லட்சம் கோடி ரூபாய்.
நிதிப்பற்றாக்குறை 94,060 கோடி ரூபாய்.
11:59 AM (IST) Feb 19
தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தமிழகத்திற்கு இதுவரை மத்திய அரசு நிதி வழங்கவில்லை என நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தனது பட்ஜெட் உரையில் விமர்சித்துள்ளார்.
மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டத்திற்கான ஒப்புதல் வழங்கவும் மத்திய அரசு தாமதிக்கிறது. இதனால் முழுச் செலவையும் மாநில அரசே ஏற்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.
11:57 AM (IST) Feb 19
ரூ.665 கோடி செலவில் 14 புறவழிச்சாலைகள் மற்றும் உயர்மட்டப் பாலங்கள் அமைக்கப்படும்.
கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள் விற்பனைக்காக சென்னையில் வணிக வளாகம் அமைக்கப்படும்.
11:50 AM (IST) Feb 19
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு ரூ.440 கோடி ஒதுக்கீடு.
சென்னை, திருச்சி, மதுரை, நீலகிரி, ஆகிய நான்கு மாவட்டங்களில் ஒலிம்பிக் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும்.
முதலமைச்சரின் இளைஞர் திறன் விழாக்கள் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தபடும்.
11:45 AM (IST) Feb 19
அரசுப் பள்ளி மாணவர்களை சாதனையாளர்களாக மாற்ற தமிழ் புதல்வன் திட்டம் அறிமுகம். இத்திட்டத்தின் கீழ் 6 முதல் 12 வகுப்புகள் வரை அரசுப் பள்ளிகளில் பயின்று கல்லூகளில் சேரும் மாணவர்களுக்கும் மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
புராதனக் கட்டடங்களைப் பழமை மாறாமல் புதுப்பிக்க ரூ.50 கோடி ஒதுக்கீடு.
ரூ.500 கோடியில் மாநிலத் தரவு மையம் அமைக்கப்படும்.
முதல் முதலாக உலகப் புத்தொழில் மாநாடு நடத்தப்படும்.
11:42 AM (IST) Feb 19
11:39 AM (IST) Feb 19
1000 ஆண்டுகள் பழமையான திருக்கோயில்களைப் புனரமைப்பு செய்ய ரூ.100 கோடி.
திருப்பரங்குன்றம், திருநீர்மலை கோயில்களில் ரோப் கார் வசதி ஏற்படுத்தப்படும்.
மக்கள்தொகைக் கணக்கெடுப்புடன் சேர்த்து சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்த மத்திய அரசுக்கு வலியுறுத்தப்படும்.
கரூர், ஈரோடு, விருதுநகரில் சிறிய ஜவுளிப்பூங்காக்கள் அமைக்க ரூ.20 கோடி
தூண்டில் வளைவுகள், மீன் இறங்குதளங்கள் அமைக்க ரூ.450 கோடி.
ஜவுளித்தொழில்நுட்ப மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ.500 கோடி.
அயோத்திதாச பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ.230 கோடி.
சென்னையை அடுத்த முட்டுக்காடு பகுதியில் கலைஞர் பன்னாட்டு மாநாட்டு அரங்கம் அமைக்கப்படும்.
11:31 AM (IST) Feb 19
11:30 AM (IST) Feb 19
இந்த நிதியாண்டில் 3,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும். 500 பேட்டரியில் இயங்கும் வாகனங்கள் வாங்கப்படும் - நிதியமைச்சர் தங்கம் தென்னரசு
11:29 AM (IST) Feb 19
சென்னை மெட்ரோ ரயில் 2ஆம் கட்டத்துக்கு ரூ.12,000 கோடி
தேவாலயங்களைப் பழமை மாறாமல் புதுப்பிக்க ரூ.10 கோடி
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு ரூ.25,858 கோடி
சிறுபான்மையினர் நலத்துறைக்கு ரூ.1470 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
11:28 AM (IST) Feb 19
தமிழ்நாடு பட்ஜெட் 2024 - 25! பட்ஜெட் உரை
11:23 AM (IST) Feb 19
அண்ணா புற்றுநோய் மருத்துவமனை சிறந்த மையமாக தரம் உயர்த்தப்படும். ஆரம்பகால நோயறிதல் விழிப்புணர்வு, சிகிச்சை ஆகியவற்றை உறுதி செய்வதே இதன் நோக்கம்.
தேனி மற்றும் சேலம் மருத்துவக் கல்லூரிகள் உட்பட ஆறு மாவட்டங்களில் 50 படுக்கைகள் கொண்ட குறைந்தது 6 புதிய விபத்து சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும்.
ஈரோடு பெருந்துறை மருத்துவக் கல்லூரிக்கு 100 படுக்கைகள் கொண்ட புதிய ஐசியூ பிளாக் அமைக்கப்படும்.
11:23 AM (IST) Feb 19
அலையாத்திக் காடுகள், பவளப்பாறைகள் மற்றும் எண்ணூர் கழிமுகத்தை மேம்படுத்த ரூ.1675 கோடி
மதுரையில் ரூ.345 கோடி செலவிலும், திருச்சியில் ரூ.350 கோடி செலவிலும் நியோ டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும். இதன் மூலம் 13,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
3,000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு இந்த ஆண்டே பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும்.
சென்னை விமான நிலையம் - கிளாம்பாக்கம், கோயம்பேடு - ஆவடி இடையே மெட்ரோ ரயில் விரிவாக்கத்துக்கு திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.