இந்திய விவசாயிகளின் மனம் குளிர வைக்கும் திட்டம்... நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு..!

By Thiraviaraj RM  |  First Published Feb 1, 2021, 11:27 AM IST

கொரோனா பாதிப்பால் இதுவரை இல்லாத அளவு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார்.
 


கொரோனா பாதிப்பால் இதுவரை இல்லாத அளவு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார்.

Tap to resize

Latest Videos

undefined

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 29-ம் தேதி தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், அன்றைய தினம் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். பின்னர் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று வரும் 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். மக்களவையில் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார். அவர் தனது உரையில், ‘’உலகம் முழுவதும் கோவிட் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவும் கடும் நெருக்கடியை சந்தித்தது. வரலாற்றில் இதுவரை இல்லாத சூழ்நிலையில் பட்ஜெட் தயாரிப்பு பணிகள் நடந்தன. சுயசார்பு இந்தியா திட்டத்தில் ரூ.27லட்சம் கோடிக்கு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் வேளாண் பொருட்களை சுமார் 100 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய புதிய திட்டங்கள். இந்தியா உலக வர்த்தகத்தின் மையமாக திகழும் வகையில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு இந்திய பொருளாதாரம் மீட்சி அடைந்து வளர்ச்சிப்பாதையில் பயணிக்க ஆரம்பித்துள்ளது. கொரோனா காலத்தில் இரவு, பகல் பாராமல் பணியாற்றிய முன்கள பணியாளர்களுக்கு மனமார்ந்த நன்றி.  27.1 லட்சம் கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மூன்று ஆத்ம நிர்பர் பாரத் தொகுப்பு அறிவிக்கப்பட்டது. கொரோனா தடுப்பூசி கிடைக்க பாடுபட்ட விஞ்ஞானிகளுக்கு நன்றி. பெரும் தொற்று ஏற்படும் என நாம் கற்பனை செய்து பார்க்கவில்லை’’ என அவர் தெரிவித்தார். 
 

click me!