அப்படிப்போடு.. கனவு பைக்கை சொந்தமாக்க சிறந்த வாய்ப்பு - அசத்தல் ஆஃபர்களை வெளியிட்ட ஜாவா நிறுவனம்!

By Ansgar R  |  First Published Dec 12, 2023, 2:29 PM IST

Jawa and Yezdi Bike offers : இந்த 2023ம் வருடம் முடிய இன்னும் வெகு சில நாட்களே உள்ள நிலையில், கார் மற்றும் பைக் விற்பனை நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை ஈர்க்க பலதரப்பட்ட சலுகைகளை வழங்கி வருகின்றனர். 


அந்த வகையில் பிரபல ஜாவா நிறுவனம் தங்களுடைய குறிப்பிட்ட சில மாடல் பைக்குகளுக்கு ரூபாய் 10,000 வரை சலுகைகள் வழங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. 2023 ஆம் ஆண்டு இன்னும் 19 நாட்களில் முடிய உள்ள நிலையில், பல்வேறு நிறுவனங்களும் தங்களுடைய கார்கள் மற்றும் பைக்குகளுக்கு சிறந்த சலுகைகளை அறிவித்து வருகின்றனர். 

இதனையடுத்து பிரபல ஜாவா மற்றும் யெஸ்டி பைக்குகளுக்கு தற்பொழுது அந்நிறுவனம் சலுகைகளை அறிவித்துள்ளது. ஆனால் இந்த சலுகைகள் வருகின்ற டிசம்பர் மாதம் 31ஆம் தேதி வரை மட்டுமே அமலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கதுஇந்த. இவ்விரு பைக்களும் பலருக்கு தங்களுடைய விருப்பமான பைக்குகளாக பல ஆண்டுகளாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

Tap to resize

Latest Videos

கோவா பைக் வீக் 2023.. புது வண்டியை அறிமுகம் செய்த கவாஸாகி - விலை மற்றும் சிறப்பம்சங்கள் என்னென்ன? முழு விவரம்!

சரி என்ன சலுகை என்பதை குறித்து பார்க்கலாம் 

உங்களுடைய பழைய பைக்கை கொடுத்துவிட்டு "எக்சேஞ்ச்" முறையில் புதிய ஜாவா பைக்குகளை வாங்கும் பொழுது அந்த பழைய பைக்கிற்கான விலையில் இருந்து 10,000 ரூபாய் வரை அதிகமாக சலுகைகள் வழங்கப்பட உள்ளது. ஆனால் இந்த சலுகையானது அனைத்து ஜாவா மற்றும் யெஸ்டி பைகளுக்கும் கிடையாது. 

ஜாவா 42 மற்றும் யெஸ்டி ரோஸ்டர் ஆகிய இரு பைக்குகளுக்கு மட்டுமே இந்த சலுகை பொருந்தும். மேலும் இந்த இரு பைக்குகளையும் சிங்கிள் டோன் எனப்படும் கலர் வேரியண்டிகளில் வாங்கினால் மட்டுமே இந்த சலுகை பொருந்தும். அதே நேரம் தங்கள் பழைய வண்டியை கொடுத்துவிட்டு எக்சேஞ்ச் முறையில் பத்தாயிரம் ரூபாய் வரை வாடிக்கையாளர்கள் சலுகை பெறும் அதே நேரம் 4 வருடம் அல்லது 50,000 கிலோமீட்டர் வரையிலான உத்தரவாதமும் தரப்படுகிறது. 

பொதுவாக பைக்குகளை வாங்கும் பொழுது 2 வருடத்திற்கு அல்லது 24,000 கிலோமீட்டர் வரை, பைக்கில் பழுதுகள் ஏற்பட்டால் அதனை இலவசமாக சரி செய்துகொள்ளும் முறை அமலில் இருக்கிறது(நிபந்தனைகளுக்கு உட்பட்டது). ஆனால் இந்த எக்ஸ்சேஞ்ச் முறையில் வாங்கும்பொழுது கூடுதலாக பத்தாயிரம் ரூபாய் கிடைப்பதோடு, 4 ஆண்டுகள் அல்லது 50,000 கிலோமீட்டர் வரையிலுமான நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. 

ஒரு முறை சார்ஜ் செய்தால்.. 104 கிமீ வரை பயணிக்கலாம்.. கைனெடிக் ஜூலு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்..

ஜாவா 42 பைக்கை பொறுத்தவரை தற்போது அது சுமார் 1.98 லட்சம் என்கின்ற எக்ஸ் ஷோரூம் விலையில் விற்பனையாகி வருகிறது. அதேபோல யெஸ்டி ரோஸ்டர் சுமார் 2.3 லட்சம் ரூபாய் என்கின்ற விலைப்பட்டியல் விற்பனையாகி வருவது குறிப்பிடத்தக்கது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

click me!