மக்கள் மனதை கவர்ந்த TATA Punch.. இனி EV வடிவிலும் கிடைக்கும் - லான்ச் எப்போது? விலை என்ன? முழு விவரம் இதோ!

By Ansgar R  |  First Published Dec 10, 2023, 2:06 PM IST

TATA Punch EV : இனி வரும் காலங்களில் பல முன்னணி நிறுவனங்கள், மக்களால் அதிகம் விரும்பப்பட்ட தங்கள் கார் மற்றும் பைக்களை EV எனப்படும் எலக்ட்ரிக் வடிவில் வெளியிட ஆயத்தமாகி வருகின்றன.


கடந்த சில வருடங்களாக உலக அளவில் கார்களால் ஏற்படும் காற்று மாசு அதிகரித்துக்கொண்டே வருகின்றது. ஆகவே மக்கள் மத்தியில் எலக்ட்ரிக் ரக வாகனங்களுக்கான வரவேற்பு அதிக அளவில் உள்ளது. இதனால் உலக அளவிலும் சரி, இந்தியாவிலும் சரி பல முன்னணி நிறுவனங்கள் தங்களிடம் உள்ள மக்களால் அதிகம் விரும்பப்பட்ட கார்களை எலக்ட்ரிக் வடிவில் வெளியிட்டு வருகின்றது. 

அண்மையில் பிரபல மகேந்திரா நிறுவனம் மக்கள் மத்தியில் அதிகம் வரவேற்பை பெற்ற தங்கள் Thar காரை எலக்ட்ரிக் வேரியண்டில் விரைவில் வெளியிடும் என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு பிரபல டாட்டா நிறுவனம் தங்களிடம் உள்ள புகழ்பெற்ற டாட்டா பஞ்ச் காரை EV வேரியண்டில் வெளியிட உள்ளது.

Latest Videos

நியூ இயர் தள்ளுபடி.. மஹிந்திரா கார்களுக்கு ரூ. 4.2 லட்சம் வரை டிஸ்கவுண்ட்.!!

TATA Punch EV 

டாடா நிறுவனம் அந்த காரை எதிர்வரும் 2024ம் ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரியில் வெளியிடவுள்ளது. முன்னதாக அந்த கார் இவ்வாண்டு டிசம்பர் மாதம் 21ம் தேதி வெளியாகும் என்று சில செய்திகள் பரவியதும் குறிப்பிடத்தக்கது. மஹிந்திரா நிறுவனத்தின் Boleroவிற்கு போட்டியாக டாடா நிறுவனம் அடுத்த ஆண்டு இந்த காரை வெளியிடுகிறது. 

Best 5 Top E-Scooters : ரூ.50,000க்குள் கிடைக்கும் சிறந்த 5 பட்ஜெட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்.!

விலை மற்றும் ஸ்பெக்ஸ் 

டாடா நிறுவனம் தங்கள் TATA Punch EV காரை சுமார் 9.50 லட்சம் முதல் 12.5 லட்சம் என்ற அளவில் வெளியிட வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. Tata Punch EV ஆனது 26kWh பேட்டரி பேக்குடன் 310கிமீ தூரம் செல்லும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த வரம்பில், இது 11.50kmpu மைலேஜை வழங்கும் என்று எதிர்பார்க்கலாம் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

click me!