எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.. உலக சந்தையை கலக்கிய பிரபல நிறுவனம் இந்தியா வருகை - OLAவிற்கு தான் செம Competition!

Ansgar R |  
Published : Dec 08, 2023, 10:15 AM IST
எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.. உலக சந்தையை கலக்கிய பிரபல நிறுவனம் இந்தியா வருகை - OLAவிற்கு தான் செம Competition!

சுருக்கம்

New Electric Scooter Brand in India : உலக அளவில், இந்தியா எலக்ட்ரிக் ரக வாகன விற்பனைக்கு மிகப்பெரிய சந்தையாக திகழ்ந்து வருவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் உலக அளவில் புகழ்பெற்ற ஒரு புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனம் விரைவில் இந்தியாவில் அறிமுகமாக உள்ளது.

கடந்த சில வருடங்களாக இந்திய சந்தையில் பெரிய அளவில் எலக்ட்ரிக் வாகனங்களின் ஆதிக்கம் அதிகரித்துக் கொண்டே போகிறது. மக்கள் இவ்வகை வாகனங்களுக்கு கொடுக்கும் ஆதரவும் பெரிய அளவில் உள்ளது. அந்த வகையில் ஓலா தொடங்கி பல முன்னணி நிறுவனங்கள் தங்களுடைய எலெக்ட்ரிக் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகின்றனர். 

ஏற்கனவே இந்தியாவை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் பல புதிய ஸ்டார்ட் எலக்ட்ரிக் வாகன நிறுவனங்கள் ஓலா நிறுவனத்திற்கு மிகப்பெரிய போட்டியாக இருந்து வரும் நிலையில், தற்போது தாய்வான் நாட்டை சேர்ந்த ஒரு புதிய எலக்ட்ரிக் வாகனம் தற்பொழுது இந்திய சந்தையில் அறிமுகமாக உள்ளது. இதுகுறித்து அறிவிப்பும் வெளியாகியுள்ளது. 

ஒருமுறை சார்ஜ் செய்தால் 300 கிமீ தூரம் ஜாலியாக ரைடு போகலாம்.. எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை எவ்வளவு?

தைவானைச் சேர்ந்த எலெக்ட்ரிக் இரு சக்கர வாகன உற்பத்தியாளரான கோகோரோ (Gogoro) இந்தியாவில் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை டிசம்பர் 12-ஆம் தேதி அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனம் வெளியிட்ட ஆன்லைன் அறிக்கைகளின்படி, இந்திய சந்தையில் வரவிருக்கும் அந்த ஸ்கூட்டர் பெயர் gogoro crossover. இந்த ஆண்டு அக்டோபர் மாதம் அது உலக சந்தையில் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது. 

பாஸ்ட் சார்ஜிங்.. குடும்பத்தோடு பயணிக்க ஏற்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.. விலை ரொம்ப கம்மிதான்..

இந்த "கிராஸ்ஓவர்" கோகோரோவால் 'ultimate two-wheeler SUV' என்று பெயரிடப்பட்டுள்ளது. அதன் முரட்டுத்தனமான தோற்றமானது பெரிய பாடி பேனல்கள், விசாலமான தரை பலகை மற்றும் பிளவு-வகையான இருக்கை ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகிறது. ஹீரோ எலக்ட்ரிக் நைக்ஸைப் போலவே, இருக்கையை ரைடர் பேக்ரெஸ்டாகச் செயல்பட மடிக்கலாம், மேலும் லக்கேஜ்களுக்கு கூடுதல் இடத்தை உருவாக்கலாம். கிராஸ்ஓவரை இயக்குவது 7kW மின்சார மோட்டார் மற்றும் இரண்டு பேட்டரிகள் ஆகும்.  ஒவ்வொன்றும் 1.6kWh திறன் கொண்டது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வருட கடைசியில் புது பைக்கை வாங்குவது லாபமா? நட்டமா? மக்களே உஷார்.!
இந்திய மக்கள் நவம்பர் மாதத்தில் அதிகம் வாங்கிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் எது தெரியுமா?