இந்தோனேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதால் புதிய பைக்குள் விலை உயர்ந்தவையாக இருக்கும். யமஹாவின் புதிய ரேஸ் பைக் விலை ரூ.4 லட்சத்திற்கு மேல் இருக்கலாம்.
முதல் இந்திய மோட்டோஜிபி பந்தயத்தை ஒட்டி, யமஹா நிறுவனம் டிசம்பரில் இந்தியாவில் இரண்டு பைக்குகளை அறிமுகம் செய்ய இருக்கிறது. இரண்டை சிலிண்டர் கொண்ட R3 மற்றும் MT-03 ஆகிய பைக்குகளை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே எதிர்பார்க்கப்பட்டுவரும் பைக்குகள் டிசம்பரில் வெளியாகக்கூடும்.
R3 மற்றும் MT-03 இரண்டும் CBU பைக்குகளாக வர உள்ளன. கவாஸ்கி நிஞ்சா 400 (Kawasaki Ninja 400), ஏப்ரிலியா ஆர்.எஸ். 457 (Aprilia RS 457) ஆகிய பைக்குகளுக்குப் யமஹாவின் புதிய பைக்குகள் போட்டியாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இரண்டுமே 321CC இரட்டை இன்ஜினைப் பெற்றுள்ளன என்று தெரிகிறது.
2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில் BS6 மாசுக்கட்டுப்பாட்டு விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து யமஹாவின் R3 பைக் இந்தியாவில் விற்பனைக்கு வரவில்லை. யமஹா இப்போது அதற்கு இணையான ரேசிங் பைக்கை மீண்டும் கொண்டு வருகிறது. இதோடு சேர்த்து MT-03 பைக்கும் அறிமுகமாக இருக்கிறது.
ஐபோன் 15 வாங்கப் போவதாக அறிவித்த எலான் மஸ்க்! காரணம் என்ன சொன்னார் தெரியுமா?
யமஹா சிகேடி (CKD) உற்பத்திக்கு மாற திட்டமிட்டுள்ளதால், முதலில் இந்த பைக்குகள் ஆரம்பத்தில் இந்தோனேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும். இதைக் கருத்தில் கொண்டு, இந்த பைக்குள் விலை உயர்ந்தவையாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். விலை ரூ.4 லட்சத்திற்கு மேல் இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.
முந்தைய யமஹா R3 பைக்கின் விலை ரூ.3.5 லட்சம் விலையில் விற்பனை செய்யப்பட்டது. மேலும் புதிய பைக் புதிய ஸ்டைல், எல்இடி ஹெட்லேம்ப்கள் மற்றும் USD ஃபோர்க் உள்ளிட்ட பல மேம்படுத்தப்பட்ட அம்சங்களைக் கொண்டிருக்கிறது.
இதற்கு முன் இந்தியாவில் விற்பனைக்கு வராத MT-03 பைக்கும் யமஹா ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது. R3 அதன் முந்தைய மாடலின் தொடர்ச்சியாக 321CC இரட்டை எஞ்சின் கொண்டதாக சிறிய மாற்றங்களுடன் வருகிறது.
Yamaha R3 மற்றும் Yamaha MT-03 இரண்டும் யமஹா நிறுவனத்தின் பிரீமியம் ப்ளூ ஸ்கொயர் டீலர் நெட்வொர்க் மூலம் விற்பனை செய்யப்படும் என்று தெரிகிறது.
தந்திரமாக லாபம் ஈட்டிய ரயில்வே; செய்த மாற்றம் இதுதான்; அள்ளியது கோடியில்!!