ராயல் என்பீஃல்டு நிறுவனம் புதிய பைக்குகளை அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. 350சிசி மற்றும் 650சிசி பிரிவுகளில் வெளியாகலாம் என்று சொல்லப்படுகிறது. இவை 2024ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்தியச் சந்தையில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள்களுக்கு எப்போதும் தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். மலையேற்றத்தில் ஈடுபாடு உள்ளவர்கள், நெடுந்தூரம் பயணம் செய்ய விரும்புகிறவர்கள் ராயல் என்ஃபீல்டு பைக்கை தேர்ந்தெடுப்பார்கள்.
ராயல் என்பீஃல்டு பைக்குகள் புல்லட் என்ற பெயரிலும் நாடு முழுவதும் பரவலாக புகழ்பெற்று விளங்குகின்றன. குறிப்பாக ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 பைக் பிரியர்கள் இடையே அதிக வரவேற்பைப் பெற்றது. ராயல் என்ஃபீல்டு பைக்குகிளல் அதிகமாக விற்பனையாகும் பைக்கும் இதுதான்.
undefined
இப்போது ராயல் என்பீஃல்டு நிறுவனம் புதிய பைக்குகளை அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. 350சிசி மற்றும் 650சிசி பிரிவுகளில் வெளியாகலாம் என்று சொல்லப்படுகிறது. இவை 2024ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்தியச் சந்தையில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மனித மலத்தை ரூ.41,000 க்கு வாங்கும் கம்பெனி! ஒரு வருட டீலுக்கு ரெடியா இருந்தா ரூ.1.4 கோடி!
Royal Enfield Guerrilla 450
ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் கெரில்லா 450 இந்த ஆண்டின் பிற்பகுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளிவரலாம். இது ட்ரையம்ப் ஸ்பீட் 400 போன்ற பைக்குகளுக்குப் போட்டியாக இருக்கலாம்.
Royal Enfield Classic 650
ராயல் என்ஃபீல்டின் கிளாசிக் 650 ட்வினில் 648சிசி பேரலல் ட்வின் என்ஜின் இருக்கலாம். இந்த எஞ்சின் அதிகபட்சம் 47 பிஎச்பி ஆற்றலில் 52 என்.எம். டார்க்கை உருவாக்கும். இந்த பைக் இன்டர்செப்டார் 650, சூப்பர் மீடியர் 650 இரண்டுக்கும் இடைப்பட்ட மாடலாக இருக்கலாம்.
Royal Enfield Bullet 650
ராயல் என்ஃபீல்டு புல்லட் 650 பைக்கையும் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இந்த மோட்டார்சைக்கிளில் 648சிசி பேரலல் ட்வின் எஞ்சின் கொண்டது. இது 47 பிஎச்பி ஆற்றலில் 52 என்எம் டார்க்கை உருவாக்கும்.
முதல் தகவல் அறிக்கை என்றால் என்ன? FIR பதிவு செய்த பின் காவல் நிலையத்தில் என்ன நடக்கும்?