
TVS Motors shows massive sales: இந்தியாவில் மக்கள்தொகை பெருக்கத்துக்கு ஏற்ப வாகனங்களும் அதிகரித்து வருகின்றன. இந்தியா உலகின் மிகப்பெரிய வாகனங்களின் சந்தையாக திகழ்வதால் பல்வேறு முன்னணி நிறுவனங்களும் போட்டி போட்டு வாகனங்களை உற்பத்தி செய்து வருகின்றன. அந்த வகையில் இந்தியாவில் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக திகழ்வது டிவிஎஸ் மோட்டார் நிறுவனம்.
விற்பனையில் மாஸ் காட்டிய டிவிஎஸ்
சென்னையை தலைமையிடமாக கொண்ட டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் ஏப்ரல் மாதம் 16% விற்பனை வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அதாவது இந்த நிறுவனம் ஏப்ரல் 2024ல் 383,615 வாகனங்களில் இருந்து ஏப்ரல் 2025ல் 443,896 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. மொத்த இரு சக்கர வாகன விற்பனை ஏப்ரல் 2024ல் 374,592ல் இருந்து ஏப்ரல் 2025ல் 430,330 ஆக 15% அதிகரித்துள்ளது. உள்நாட்டு இரு சக்கர வாகன விற்பனை ஏப்ரல் 2024ல் 301,449ல் இருந்து ஏப்ரல் 2025ல் 323,647 ஆக 7% அதிகரித்துள்ளது.
இரு சக்கர வாகன விற்பனை
மோட்டார் சைக்கிள் விற்பனை ஏப்ரல் 2024ல் 188,110ல் இருந்து ஏப்ரல் 2025ல் 220,527 ஆக 17% அதிகரித்துள்ளது. ஸ்கூட்டர் விற்பனை ஏப்ரல் 2024ல் 144,126ல் இருந்து ஏப்ரல் 2025ல் 169,741 ஆக 18% அதிகரித்துள்ளது. டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் மின்சார வாகன விற்பனை ஏப்ரல் 2024ல் 17,403ல் இருந்து ஏப்ரல் 2025ல் 27,684 ஆக 59% அதிகரித்துள்ளது. இந்த நிறுவனத்தின் மொத்த ஏற்றுமதி ஏப்ரல் 2024ல் 80,508ல் இருந்து ஏப்ரல் 2025ல் 116,880 ஆக 45% அதிகரித்துள்ளது.
மூன்று சக்கர வாகன விற்பனை
இரு சக்கர வாகன ஏற்றுமதி ஏப்ரல் 2024ல் 73,143ல் இருந்து ஏப்ரல் 2025ல் 106,683 ஆக 46% அதிகரித்துள்ளது.நிறுவனத்தின் மூன்று சக்கர வாகன விற்பனை ஏப்ரல் 2024ல் 9,023ல் இருந்து ஏப்ரல் 2025ல் 13,566 ஆக 50% அதிகரித்துள்ளது.
ஒரே நிறுவனம் இதுதான்
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் (பிஎஸ்இ:532343 மற்றும் என்எஸ்இ: TVSMOTOR) உலகளவில் புகழ்பெற்ற இரு மற்றும் மூன்று சக்கர வாகன உற்பத்தியாளர். இந்தியா மற்றும் இந்தோனேஷியாவில் நான்கு அதிநவீன உற்பத்தி நிலையங்களைக் கொண்டுள்ளது. டிவிஎஸ் மோட்டார் டெமிங் பரிசை வென்ற ஒரே இரு சக்கர வாகன நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.