
பிரிட்டனின் புகழ்பெற்ற இருசக்கர வாகன நிறுவனம் டிரையம்ப், 2026 மாடல் ஆண்டு அடுத்த 6 மாதங்களில் 29 புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட மோட்டார்சைக்கிள்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் 1,41,683 யூனிட்கள் விற்பனை சாதனை படைத்தது. மேலும் 2019 முதல் 136% வளர்ச்சியை நிறுவனம் எட்டியுள்ளது.
புதிய மாடல்கள் மற்றும் வேரியன்ட்கள்
இதில் ஏழு மாடல்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. அவை TXP எலக்ட்ரிக் யூத் சீரிஸ், TF 450-X ஆஃப்-ரோடு மற்றும் ஸ்பீட் டிரிபிள் RX ஆகியவை. வெளியேற்றப்பட்ட மாடல்கள், தற்போதுள்ள பைக்குகளின் புதிய வேரியன்ட்கள் மற்றும் பல பிரிவுகளில் முற்றிலும் புதிய மோட்டார்சைக்கிள்கள் அடங்கும்.
உலகளாவிய விரிவாக்கம்
டிரையம்ப் தற்போது 68 நாடுகளில் 950-க்கும் மேற்பட்ட டீலர்ஷிப்கள் மூலம் செயல்படுகிறது. இந்தியா, சீனா மற்றும் பிரேசில் ஆகிய சந்தைகள் அதிக வளர்ச்சியைப் பெற்றுள்ளன. 500 சிசிக்குக் குறைவான ஸ்பீட் 400, ஸ்க்ராம்ப்ளர் 400X மற்றும் ஸ்க்ராம்ப்ளர் 400XC போன்ற மாடல்கள், மலிவு விலை மற்றும் பிரீமியம் அம்சங்கள் மூலம் பெரும் ஈர்ப்பை பெற்றுள்ளன.
இந்தியாவில் விற்பனை வெற்றி
பஜாஜ் ஆட்டோவுடன் இணைந்து உருவாக்கப்பட்ட ஸ்பீட் 400 மற்றும் ஸ்க்ராம்ப்ளர் 400X இந்தியாவில் பெரும் வரவேற்பை பெற்றது பெற்றுள்ளன. எதிர்காலத்தில், 500 சிசிக்கு குறைவான புதிய எலக்ட்ரிக் மாடல்களும் இந்திய சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
எலக்ட்ரிக் யூத் TXP சீரிஸ்
புதிய TXP எலக்ட்ரிக் யூத் லைன், இளம் ரைடர்களுக்காக நான்கு மாடல்களுடன் வர உள்ளது. இலகுரக பிரேம், பிரீமியம் வடிவமைப்பு மற்றும் ஒருங்கிணைந்த பாதுகாப்பு தொழில்நுட்பம் இதன் முக்கிய அம்சங்கள். இது டிரையம்பின் எலக்ட்ரிக் இருசக்கர வாகன பிரிவில் முதல் நுழைவு.
எதிர்காலத் திட்டங்கள்
வரவிருக்கும் பெரும்பாலான மாடல்கள் இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தப்பட உள்ளன. சமீபத்தில் ஸ்பீட் டிரிபிள் 1200 RS மற்றும் லிமிடெட் ரன் RX வெளியிடப்பட்டுள்ளன. 2026 போன்வில் சீரீஸ் உள்ளிட்ட புதிய பைக்குகள், பாரம்பரியம் மற்றும் வளர்ந்துவரும் பிரிவுகளில் டிரையம் நிலையை வலுப்படுத்தும்.