SUV போட்டியில் டாடா சியரா vs ரெனால்ட் டஸ்டர்.. எதிர்பார்ப்பு எகிறுது.!!

Published : Sep 17, 2025, 11:40 AM IST
SUV

சுருக்கம்

டாடா சியாரா மற்றும் ரெனால்ட் டஸ்டர் ஆகிய பிரபலமான எஸ்யூவிகள் இந்திய சந்தையில் மீண்டும் அறிமுகமாக உள்ளன.

வாகன ரசிகர்களுக்கு அடுத்த சில மாதங்கள் சுவாரஸ்யமாக இருக்கும் என்றே கூறலாம். காரணம், பல புதிய எஸ்யூவிகள் வரிசையாக அறிமுகமாக உள்ளன. குறிப்பாக டாடா சியாரா மற்றும் ரெனால்ட் டஸ்டர் என்ற பிரபலமான பெயர்கள் இந்திய சாலைகளில் மீண்டும் களமிறங்குகின்றன. இவை இரண்டும் பல பவர்டிரெய்ன் விருப்பங்களுடன், புதிய வடிவமைப்பில், நடுத்தர எஸ்யூவி பிரிவில் ஹூண்டாய் கிரெட்டா போன்ற முன்னணி மாடல்களுடன் போட்டியிடுகின்றனர்.

டாடா சியாரா முதலில் எலக்ட்ரிக் வேரியண்ட்டாக 2025 அக்டோபர் அல்லது நவம்பரில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனுடன், அதன் ஐசிஇ பதிப்பு 2026 தொடக்கத்தில் வெளிவரும். மறுபுறம், மூன்றாம் தலைமுறை ரெனால்ட் டஸ்டர் 2026 தொடக்கத்தில் இந்திய சந்தையில் இடம் பெறும். இதனைத் தொடர்ந்து, அடுத்த 12 மாதங்களில் ஹைபிரிட் வேரியண்டும் வெளியாகும்.

புதிய ரெனால்ட் டஸ்டரின் என்ஜின் விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளிவராத நிலையில், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் விருப்பங்களுடன் வரும் என வட்டாரங்கள் கூறுகின்றன. மேல்தர வேரியண்ட்களில் ஹைபிரிட் பவர்டிரெய்ன் இடம்பெறும். மேலும், சிஎன்ஜி பதிப்பு தொடர்பாகவும் ரெனால்ட் பரிசீலனை செய்து வருகிறது. டஸ்டரின் கேபின் முந்தைய மாடலை விட மேம்பட்டதாகவும், சர்வதேச சந்தையில் விற்கப்படும் டேசியா பிக்ஸ்டரிடமிருந்து வடிவமைப்பு ஈர்ப்பு பெற்றதாகவும் இருக்கும்.

டாடா சியாரா இவி, ஹாரியர் இவியில் பயன்படுத்தப்பட்ட 65kWh மற்றும் 75kWh பேட்டரி பேக்குகளை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு உள்ளது. அதேசமயம், ஐசிஐ பதிப்பில் 1.5 லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் விருப்பங்களும் கிடைக்கும். இதனால் வாடிக்கையாளர்களுக்கு எலக்ட்ரிக் மற்றும் பாரம்பரிய எரிபொருள் விருப்பங்களை தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளது.

உள்ளமைப்பு அம்சங்களில், டாடா சியரா ஒரு பிரீமியம் கேபினை வழங்கும். இதில் ட்ரிபிள் ஸ்கிரீன் செட்அப், பனோரமிக் சன்ரூஃப், பில்ட்-இன் டேஷ்கேம், HUD டிஸ்ப்ளே, லெவல்-2 ADAS, வென்டிலேட்டட் பவர்டு சீட்கள், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்ற பல நவீன அம்சங்கள் இடம் பெறும். இதனால், புதிய சியாரா சந்தையில் வரவிருக்கும் எஸ்யூவிகளுக்கு வலுவான சவால் விடுக்கும்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ரூ.13,300 மதிப்புள்ள இலவச ஆக்சஸரீஸ்.. Scrambler 400 X வாங்குபவர்களுக்கு ஃப்ரீ..!
30 நிமிடத்தில் 70% சார்ஜ்.. குடும்பங்களுக்கான 7 சீட்டர் EV.. VinFast புதிய மாடல்!