Maruti Suzuki: மாருதி சுசுகி ஃப்ரான்க்ஸ், ஜிம்னி கார்களுக்கு 3.3 லட்சம் வரை தள்ளுபடி! உடனே போய் புக் பண்ணுங்க!

Published : Jul 23, 2024, 05:30 PM ISTUpdated : Jul 24, 2024, 04:59 PM IST
Maruti Suzuki: மாருதி சுசுகி ஃப்ரான்க்ஸ், ஜிம்னி கார்களுக்கு 3.3 லட்சம் வரை தள்ளுபடி! உடனே போய் புக் பண்ணுங்க!

சுருக்கம்

மாருதி சுசுகி கார் வாங்க நினைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு. ஜூலை மாதம் மட்டும்தான் சில மாடல் கார்கள் ரூ. 3.3 லட்சம் வரை தள்ளுபடியில் கிடைக்கும்.

மாருதி சுஸுகி கார் வாங்க நினைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு காத்திருக்கிறது. குறிப்பிட்ட மாடல் கார்களுக்கு  மாருதி சுஸுகி நிறுவனம் ரூ. 3.3 லட்சம் வரை தள்ளுபடி வழங்குகிறது. இந்தச் சலுகை ஜூலை மாதம் மட்டும்தான் கிடைக்கும்.

பலேனோ அடிப்படையிலான கிராஸ்ஓவர் SUV, காரான மாருதி சுஸுகி ஃபிரான்க்ஸ் (Fronx) ரூ. 85,000 சலுகையுடன் கிடைக்கிறது. மாருதி சுஸுகி ஜிம்னியை கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில், ரூ.80,000 தள்ளுபடியில் விற்பனைக்கு உள்ளது. இந்தக் காரின் ஆல்ஃபா வேரியண்டில் ரூ.1.8 லட்சம் வரை தள்ளுபடியைப் பெறலாம்.

மாருதி சுஸுகியின் பைனான்ஸ் ஆப்ஷன்களைத் தேர்ந்தெடுத்தால், ரூ. 1.5 லட்சம் கூடுதல் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. இதனால், மொத்த சேமிப்பு ரூ.3.3 லட்சமாக இருக்கும். Zeta வேரியண்டும் ரூ.2.75 லட்சம் சலுகையில் விற்பனை செய்யப்படுகிறது.

ஜிம்னி கார் 105 ஹெச்பி மற்றும் 134 என்எம் டார்க்கை வழங்கும் 1.5 லிட்டர் நான்கு சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இது 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 4-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது. ஆல்பா ஏ.டி. வேரியண்ட் ரூ.14.79 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும், ஆல்பா எம்டி ரூ.13.69 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் தொடங்குகிறது.

மாருதி சுஸுகி ஃபிரான்க்ஸ் டர்போ-பெட்ரோல் மாடல்கள் இப்போது ரூ.85,000 மதிப்புள்ள சலுகைகளுடன் விற்பனைக்கு உள்ளன. இந்த மாத தொடக்கத்தில் ரூ.75,000 சலுகை அளிக்கப்பபட்ட நிலையில், இப்போது மேலும் கூடியிருக்கிறது. பெட்ரோல் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரிம்கள் முறையே ரூ.32,500 மற்றும் ரூ.35,000 சலுகைகளுடன் விற்பனை செய்யப்படுகின்றன. சிஎன்ஜி மாடலும் ரூ.10,000 தள்ளுபடியில் கிடைக்கும்.

மாடல் வாரியான தள்ளுபடி விவரம் மற்றும் நிபந்தனைகள் பற்றி அறிய வாடிக்கையாளர்கள் தங்களுக்கு அருகிலுள்ள மாருதி சுஸுகி டீலரை அணுகி விசாரித்துக்கொள்ளலாம்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ரூ.13,300 மதிப்புள்ள இலவச ஆக்சஸரீஸ்.. Scrambler 400 X வாங்குபவர்களுக்கு ஃப்ரீ..!
30 நிமிடத்தில் 70% சார்ஜ்.. குடும்பங்களுக்கான 7 சீட்டர் EV.. VinFast புதிய மாடல்!