
விண்டேஜ் கார் பிரியர்களுக்கு ஒரு சந்தோஷ செய்தி. கார் பிரியர்களுக்கு விண்டேஜ் வாகனங்களை இறக்குமதி செய்வதை இந்திய அரசு எளிதாக்கியுள்ளது. 50 வருஷம் அல்லது அதற்கு மேற்பட்ட பழமையான கிளாசிக், விண்டேஜ் கார்களை லைசன்ஸ் இல்லாமல் இறக்குமதி செய்யும் வகையில் இந்திய அரசு புதிய சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. அதாவது, 1975 வரை தயாரிக்கப்பட்ட விண்டேஜ் வாகனங்களை இப்போது இறக்குமதி செய்ய அனுமதி உண்டு. முந்தைய விதிகளின்படி, 1950 க்கு முன்பு தயாரிக்கப்பட்ட கார்களை மட்டுமே நாட்டில் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டது.
அதாவது 2025 இல், 1975 வரை தயாரிக்கப்பட்ட வாகனங்களைக் கொண்டு வரலாம். 2026 இல், 1976 முதல் தயாரிக்கப்பட்ட கார்கள் தகுதி பெறும். இந்த தொடர் தகுதி ஆண்டுதோறும் தொடரும். இது கிளாசிக் கார் பிரியர்களுக்கு அவர்கள் விரும்பும் விண்டேஜ் அல்லது கிளாசிக் கனவு வாகனங்களைக் கொண்டு வருவதை எளிதாக்குகிறது. வாகனங்களின் உண்மையான பழமையை நிர்ணயிப்பது அவற்றின் முதல் விற்பனையின் அசல் பதிவு தேதியாக இருக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
யாருக்கு கிளாசிக் கார்களை இறக்குமதி செய்ய முடியும்?
தனிப்பட்ட பயன்பாட்டிற்காக ஒரு விண்டேஜ் காரை வைத்திருக்க விரும்பும் எவருக்கும் இப்போது தயாரிப்பு தேதியிலிருந்து குறைந்தது 50 ஆண்டுகள் பழமையான வாகனங்களை இறக்குமதி செய்ய முடியும். தனி இறக்குமதி உரிமம் தேவையில்லை, இது செயல்முறையை முன்பை விட எளிதாக்குகிறது. இருப்பினும், இந்த வாகனங்களை இந்தியாவிற்குள் மறுவிற்பனை செய்வது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட இதுபோன்ற கார்கள் கார் சேகரிப்பில் தொடர்கிறது என்பதை உறுதி செய்யவே அரசு இந்த கட்டுப்பாட்டை விதித்துள்ளது.
நன்மைகள்
இந்தியாவில் கிளாசிக் கார் துறை செழித்து வளர்ந்தாலும், கடுமையான கட்டுப்பாடுகள் விண்டேஜ் கார்களை இறக்குமதி செய்வதை கடினமாக்கியது. இந்த புதிய சட்டத்தின் கீழ், பழைய வாகனங்களை சேகரிப்பவர்களுக்கும் வாகன பிரியர்களுக்கும் இப்போது உலகம் முழுவதிலுமிருந்து சின்னமான மாடல்களை சட்டப்பூர்வமாக இந்தியாவிற்கு கொண்டு வர முடியும். புதிய விதிகள் ஒரு விண்டேஜ் காரை இறக்குமதி செய்வதையும் சொந்தமாக வைத்திருப்பதையும் முன்பை விட மிகவும் எளிதாக்குகிறது.
ஜாகுவார், BMW, போர்ஷே, ஃபோர்டு, ஷெவ்ரோலே போன்ற பிராண்டுகளிலிருந்து கார்களை இப்போது மிகவும் எளிமையான செயல்முறை மூலம் இறக்குமதி செய்ய முடியும். இந்த புதிய கார் இறக்குமதி கொள்கை நாட்டின் விண்டேஜ் கார் மறுசீரமைப்புத் தொழிலை மேம்படுத்த வாய்ப்புள்ளது. கிளாசிக் கார் டீடைலிங், இன்ஜின் மறுகட்டமைப்பு, அப்ஹோல்ஸ்டரி மறுசீரமைப்பு ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற பட்டறைகளுக்கு இது புதிய வாய்ப்புகளைத் திறக்கும்.
அதேசமயம் விண்டேஜ் கார்களை இறக்குமதி செய்வது எளிதாகிவிட்டாலும், உரிமையாளர்கள் தங்கள் வாகனங்கள் பின்வருவனவற்றைப் பின்பற்றுகின்றன என்பதை உறுதி செய்ய வேண்டும்:
1 பயனர்கள் வாகனத்தின் இன்வாய்ஸ் மதிப்பில் சுமார் 250 சதவீதம் வரை அதிக சுங்க வரி, GST மற்றும் பிற தொடர்புடைய கட்டணங்களை செலுத்த வேண்டியிருக்கும்.
2 மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், வெளிநாட்டு வர்த்தகத்தின் இயக்குநரகம் இந்த இறக்குமதி செய்யப்பட்ட விண்டேஜ் வாகனங்களை இந்திய சந்தையில் மறுவிற்பனை செய்வதை தடை செய்துள்ளது. விண்டேஜ் கார்களை தனிப்பட்ட பயன்பாட்டிற்காக மட்டுமே இறக்குமதி செய்ய முடியும்,
3. இந்த வாகனங்கள் விற்பனைத் தடைச் சட்டத்தின் கீழ் வரும் என்றும் வெளிநாட்டு வர்த்தகத்தின் இயக்குநரகம் (DGFT) கூறுகிறது. விண்டேஜ் கார்கள் வாகன உரிமையாளரின் சேகரிப்பில் தொடர்கிறது என்பதை இந்த சட்டம் உறுதி செய்கிறது.
4 விண்டேஜ் அல்லது கிளாசிக் கார்களை வாங்க விரும்பும் எவருக்கும் தனி இறக்குமதி உரிமம் தேவையில்லை.
5 நுகர்வோர் தங்கள் வாகனங்கள் 1988 ஆம் ஆண்டின் மோட்டார் வாகனச் சட்டம் மற்றும் 1989 ஆம் ஆண்டின் மத்திய மோட்டார் வாகன விதிகளைப் பின்பற்றுகின்றன என்பதை உறுதி செய்ய வேண்டும். இந்த வாகனங்கள் உமிழ்வு விதிகளையும் பின்பற்ற வேண்டும்.
மிடில் கிளாஸ் மக்களுக்கு குறைந்த விலையில் கிடைக்கும் பட்ஜெட் பைக்குகள்..!!