
"ராயல் என்ஃபீல்டு ஷாட்கன் 650", இது தான் சமீபத்தில் நடந்த மோட்டோவர்ஸ் 2023 நிகழ்வில் வெளியிடப்பட்ட வண்டி ஆகும். உலக அளவில் வெளியாகவுள்ள இந்த வண்டியின் தோற்றத்தை வெளியிடும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்தது. மேலும் இந்த வாகனம் REயின் Super Meteor 650 உடன் அதன் சில அடிப்படைகளை பகிர்ந்து கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ராயல் என்பீல்ட் நிறுவனத்தின் Continental GT 650 மற்றும் Super Meteor 650க்கு இடையில் உள்ள ரேஞ்சில் இந்த புதிய ஷாட்கன் 650 இருக்கும். இந்த ஷாட்கன் 650 ஆனது ராயல் என்ஃபீல்டின் மற்ற 650 சிசி மோட்டார்சைக்கிள்களில் உள்ள அதே எஞ்சின் மூலம் இயக்கப்படும் - 648 சிசி பேரலல்-ட்வின், ஏர்-கூல்டு ஆயில் யூனிட் இது 47 பிஎச்பி அதிகபட்ச ஆற்றலையும் மற்ற 650 சிசி பைக்குகளில் 52 பிஎச்பி பீக் டார்க்கையும் உருவாக்குகிறது.
ஏதர் நிறுவனத்தின் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வந்தாச்சு.. எல்லாரும் வாங்க.. குவியும் முன்பதிவு..
மேலும், இன்ஜின் 6-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் ஸ்லிப் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் உடன் இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வரவிருக்கும் 2-சக்கர வாகனத்தில், LED ஹெட்லேம்ப், ஒரு டிஜி-அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டிரிப்பர் நேவிகேஷன், ஒரு USB சார்ஜிங் போர்ட், ராயல் என்ஃபீல்ட் விங்மேன் அஸ்சிஸ்ட் மற்றும் 31 பாகங்கள் போன்ற அம்சங்களை வழங்கியுள்ளது. .
வித விதமான வண்ணங்கள்
கிரீன் ட்ரில், பிளாஸ்மா ப்ளூ, ஷீட்மெட்டல் கிரே மற்றும் ஸ்டென்சில் ஒயிட் என நான்கு ‘தனித்துவமான’ வண்ணங்களில் இந்த பைக் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஷாட்கன் 650 டியூப்லெஸ் டயர்களுடன் கூடிய அலாய் வீல்களில் இயங்கும்; அலாய் வீல்களின் டைமண்ட் கட் பதிப்பு அதிகாரப்பூர்வ துணைப் பொருளாக விற்கப்படும்.
பேட்டரியில் இயங்கும் எலெக்ட்ரிக் காரிலும் எஞ்சின் ஆயில் மாற்றணுமா?
எதிர்வரும் 2024ம் ஆண்டு இந்திய சந்தையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த பைக், சுமார் 3 முதல் 3.5 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாகனத்திற்கான முன்பதிவுகளும் அடுத்த ஆண்டு துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.