அந்த காலத்துல புல்லட் பைக்கின் விலை எவ்வளவு தெரியுமா? வைரலாகும் பழைய ராயல் என்ஃபீல்டு பில்!

By SG Balan  |  First Published Dec 15, 2023, 10:58 AM IST

37 ஆண்டுகளுக்கு முன் ஜார்கண்ட் மாநிலத்தில் சந்தீப் ஆட்டோ என்ற ஷோரூமில் வாங்கப்பட்ட பைக்கின் பில் வைரலாகியுள்ளது. பைக் பிரியர்கள் அனைவரும் இந்த பில் குறித்து ஆச்சரியத்துடன் கருத்து கூறி வருகிறார்கள்.


அண்மையில் 1986-ல் வாங்கப்பட்ட ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 பைக்கின் பில் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 பைக் இந்தியாவில் மிகவும் பிரபலமான பைக்குகளில் ஒன்றாகப் பெயர் பெற்றது. பல ஆண்டுகளாக பைக் ரசிகர்களால் விரும்பப்படும் பைக்காக உள்ளது. பைக்குகளின் வடிவமைப்பு பல மாற்றங்கள் அடைந்தபோதும் ராயல் என்ஃபீல்டு பைக்குகளின் வடிவமைப்பு கிட்டத்தட்ட அதேபோல இருக்கிறது. இதுவும் இந்த பைக் மீது பலரும் ஆர்வம் காட்டக் காரணமாக இருக்கிறது.

Latest Videos

ஆனால் ராயல் என்ஃபீல்டு பைக்குகளில் புதிய புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டு வருகின்றன. இதனால் இந்த பைக்குகளுக்கு மவுசு கூட்டிக்கொண்டே போகிறது. அதற்கு ஏற்ப விலையும் அதிகமாகிவிட்டது. இந்நிலையில், ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 தற்போது ரூ.1.5 லட்சம் முதல் ரூ. 1.65 லட்சம் எக்ஸ் ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆன்ரோடு விலை ரூ.1.80 லட்சம் வரை இருக்கும்.

ஆனால், 1986ஆம் ஆண்டு ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 பைக் ரூ.18,700 (ஆன்ரோடு) விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 1986ஆம் ஆண்டில் வாங்கப்பட்ட ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 பைக்கின் பில் ஒன்றின் மூலம் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது.  இந்த பில் சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது.

இந்த பில், 37 ஆண்டுகளுக்கு முன் ஜார்கண்ட் மாநிலத்தில் சந்தீப் ஆட்டோ என்ற ஷோரூமில் வாங்கப்பட்ட பைக்கின் பில் ஆகும். பைக் பிரியர்கள் அனைவரும் இந்த பில் குறித்து ஆச்சரியத்துடன் கருத்து கூறி வருகிறார்கள்.

அந்த காலத்தில் ராயல் என்ஃபீல்டு பைக்குகள் என்ஃபீல்டு புல்லட் என்றுதான் அழைக்கப்பட்டன என்பது நினைவூட்டத்தக்கது. இப்போது கிடைக்கும் இந்த பைக் சுமார் 37 kmpl மைலேஜ் கொடுக்கிறது.

click me!