ரெனால்ட் - நிசான் தமிழக ஆட்டோமொபைல் துறையில் 600 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது சுமார் 5 ஆயிரத்து 300 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது.
ரெனால்ட் - நிசான் தமிழக ஆட்டோமொபைல் துறையில் 600 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது சுமார் 5 ஆயிரத்து 300 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது. பிரெஞ்சு ஆட்டோமொபைல் நிறுவனமான ரெனால்ட் மற்றும் ஜப்பானிய வாகன தயாரிப்பு நிறுவனமான நிசான் தமிழ்நாடு ஆட்டோமொபைல் துறையில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு 600 மில்லியன் அமெரிக்க டாலர்களை (சுமார் ரூ. 5,300 கோடி) முதலீடு செய்துள்ளன. முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதுமட்டுமின்றி இரு நிறுவனங்களும் இணைந்து உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளுக்கு ஆறு புதிய உற்பத்தி வாகனங்களை உருவாக்கி அறிமுகப்படுத்த உள்ளது. இதில், 2 எலெக்ட்ரிக் கார்களும் (Electric Cars) அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 6 புதிய கார்களில், 3 கார்கள் ரெனால்ட் நிறுவனத்துடையதாக இருக்கும்.
இதையும் படிங்க: செம அப்டேட்ஸ்! வெளியானது பிஎம்டபிள்யூ எக்ஸ்1 சொகுசு கார் - விலை எவ்வளவு தெரியுமா? முழு விபரம் இதோ
undefined
அதே நேரத்தில் எஞ்சிய 3 கார்கள் நிஸான் நிறுவனத்துடையதாக இருக்கும். இதன் மூலம் சென்னையில் உள்ள அந்நிறுவனங்களின் தொழிற்சாலை விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. அனைத்து கார்களும் அதிகளவு உள்நாட்டு உபகரணங்களை கொண்டிருக்கும். மேலும் சென்னையில் உள்ள கூட்டணி ஆலையில் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. இந்த புதிய திட்டத்திற்காக ரூ. 3 ஆயிரத்து 500 கோடியை முதலீடு செய்ய இருக்கிறது. இதன் மூலம் 2 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும். இதுதவிர ரெனால்ட் நிசான் ஆட்டோமோடிவ் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆலை மறுசுழற்சி செய்யப்பட்ட எரிசக்தியை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இதுக்குறித்து தமிழக அரசின் தொழில்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன் கூறுகையில், தமிழ் நாட்டில் ரெனால்ட்-நிசான் கூட்டமைப்பு உற்பத்தி மற்றும் டிசைன் பிரிவு கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது.
இதையும் படிங்க: உற்பத்தியாளர்களால் நிறுத்தப்படும் 13 கார்கள்... ஏப்.1க்குப் பிறகு கிடைக்காது என தகவல்!!
தமிழக அரசு மற்றும் கூட்டணிக்கு இது மிக முக்கியமான மற்றும் அதிக மதிப்பு கொண்ட உறவு. இதன் மூலம் மாநிலத்தில் நேரடியாக 15 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. இதன் மூலம் இந்தியாவின் ஆட்டோமோடிவ் தலைநகராக தமிழகம் தொடர்ந்து நீடிக்கும். ஆட்டோமொபைல் உற்பத்தி, ஆட்டோ உபகரணங்கள் மற்றும் டிசைன் உள்ளிட்டவைகளுக்கான முக்கிய பகுதியாக தமிழகம் மாறும். தமிழகத்தில் ரெனால்ட்-நிசான் கூட்டணியின் நவீனமயமாக்கல் தொடர்பான புதிய முதலீட்டின் கீழ் துவங்க இருக்கும் திட்டம் எங்களுக்கு மகிழ்ச்சியை ஏறப்டுத்தியுள்ளது. இது மேக் இன் தமிழ் நாடு மற்றும் மேக் இன் இந்தியா ஃபார் தி வொர்ல்டு திட்டத்தின் கீழ் வருகிறது என்று தெரிவித்துள்ளார்.