அடுத்த 3-4 ஆண்டுகளில் 100 மெகாவாட் பேட்டரிகளை மறுசுழற்சி செய்ய இலக்குடன் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் 1 GWh க்கும் அதிகமான EV பேட்டரிகளை பயன்படுத்த ஒமேகா செய்கி திட்டமிட்டுள்ளது.
ஜப்பானைச் சேர்ந்த எலக்ட்ரிக் வாகன உற்பத்தியாளரான ஒமேகா செய்கி (Omega Seiki) மற்றும் மின்-கழிவு மேலாண்மை நிறுவனமான அட்டேரோ (Attero) ஆகியவை மின்சார வாகனங்களின் நிலைத்தன்மையை மேம்படுத்தும் திட்டத்துடன் கூட்டு சேர்ந்துள்ளன.
இந்தக் கூட்டணியின் ஒரு பகுதியாக, இரு நிறுவனங்களும் மின்சார வாகன உதிரி பாகங்களின் பயன்பாட்டு ஆயுளை மறுசுழற்சி மூலம் அதிகப்படுத்த உள்ளன. இதற்காக எலெக்ட்ரிக் வாகனங்களின் பேட்டரிகளை மறுசுழற்சி செய்ய உள்ளனர்.
அடுத்த 3-4 ஆண்டுகளில் 100 மெகாவாட் பேட்டரிகளை மறுசுழற்சி செய்ய இலக்குடன் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் 1 GWh க்கும் அதிகமான EV பேட்டரிகளை பயன்படுத்த ஒமேகா செய்கி திட்டமிட்டுள்ளது.
ஓமேகா செய்கி நிறுவனம் இதற்காக 10,000 வாகனங்களை பயன்படுத்த உள்ளது. ஆண்டுதோறும் 1,45,000 மெட்ரிக் டன் மின்-கழிவுகளையும், 11,000 மெட்ரிக் டன் பேட்டரி கழிவுகளையும் மறுசுழற்சி மூலம் செயல்பட வைக்கும் திறன் இருப்பதாக அட்டெரோ கூறுகிறது. இதை பிப்ரவரி 2024க்குள் இதை 15,000 மெட்ரிக் டன்னாக உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
OSPL அதன் அனைத்து ஆலைகளையும் சூரிய சக்தியில் இயங்குவதாக மாற்றுவதில் கவனம் செலுத்துகிறது. மறுசுழற்சி செய்யமுடியாத எரிபொருள் பயன்பாட்டை பூஜ்ஜியமாகக் குறைக்கும் கொள்கையில் உறுதியாக இருக்கிறது. அதன்படி, 100% கழிவுகளை மறுசுழற்சி செய்ய திட்டமிட்டிருக்கிறது. எதிர்கால சுற்றுச்சூழலுக்கு கழிவு மேலாண்மையின் இன்றியமையாத பங்கையும் அந்த நிறுவனம் வலியுறுத்துகிறது.
தூய்மையான மற்றும் பசுமையான உலகளாவிய எதிர்காலத்திற்கு பங்களிக்கும் நோக்குடன், இந்த கூட்டணி இந்தியாவின் எல்லைகளுக்கு அப்பால் விரிவடைந்து, ஆசியான் மற்றும் ஆப்பிரிக்க பிராந்தியங்களையும் உள்ளடக்கி இருக்கிறது. லித்தியம்-அயன் பேட்டரி மறுசுழற்சியில் தொழில்நுட்ப வலிமையை மேம்படுத்துவதன் மூலம், இரண்டு நிறுவனங்களும் சுற்றுச்சூழலுக்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்கும் என்றும் தெரிவித்துள்ளன.