பவர்ஃபுல் பேட்டரியுடன் புதிய Ola S1 X எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! 8 வருசத்துல 80,000 கி.மீ. கேரண்டி!

By SG Balan  |  First Published Feb 3, 2024, 9:52 AM IST

ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 8 ஆண்டுகள் அல்லது 80,000 கி.மீ. பயணத்துக்கான நீட்டித்த பேட்டரி வாரண்டியையும் அளிக்கிறது. இந்த உத்தரவாதம் மின்சார வாகனம் வாங்க விரும்புவோரை கவரும் குறிப்பிடத்தக்க அம்சமாக இருக்கும் என்று ஓலா கருதுகிறது.


எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் முன்னணியில் இருக்கும் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் 4 kWh பேட்டரி கொண்ட S1 X ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தி உள்ளது. ரூ.1.09 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகமாகியுள்ள இந்த ஸ்கூட்டரை ஏப்ரல் 2024க்குள் டெலிவரி செய்யப்படும் என்றும் கூறியுள்ளது.

ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 8 ஆண்டுகள் அல்லது 80,000 கி.மீ. பயணத்துக்கான நீட்டித்த பேட்டரி வாரண்டியையும் அளிக்கிறது. இந்த உத்தரவாதம் மின்சார வாகனம் வாங்க விரும்புவோரை கவரும் குறிப்பிடத்தக்க அம்சமாக இருக்கும் என்று ஓலா கருதுகிறது.

Tap to resize

Latest Videos

நாடு முழுவதும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான சேவை மையம் மற்றும் சார்ஜிங் நெட்வொர்க்கை விரிவுபடுத்த இருப்பதாகவும் கூறியுள்ளது. வாடிக்கையாளர்களின் வசதிக்காக 3 கிலோவாட் திறன் கொண்ட ஃபாஸ்டு சார்ஜரை ரூ.29,999 விலையில் விற்பனை செய்கிறது.

பிரான்சில் UPI பேமெண்ட்! ஈபிள் டவரைப் பார்க்க ரூபாயில் பணம் செலுத்தி டிக்கெட் வாங்கலாம்!

Ola S1 X எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் புதிய மாடலில் பெரிய பேட்டரியைத் தவிர, வேறு பெரிய மாற்றங்கள் ஏதும் இல்லை. 4 kWh பேட்டரி பேக் மூலம் இந்த ஸ்கூட்டரின் ரேஞ்ச் 190 கிமீ ஆக உயர்ந்துள்ளது. 3 kWh மாடலின் ரேஞ்ச் 143 கிமீ ஆக இருந்தது.

இந்த ஸ்கூட்டருடன் 750 W போர்ட்டபிள் சார்ஜரும் வழங்கப்படுகிறது. இந்த சார்ஜர் மூலம் 6.5 மணிநேரத்தில் 0 முதல் 100 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும். 6 கிலோவாட் மோட்டார் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 5.5 வினாடிகளில் 0 முதல் 60 கிமீ வேகத்தில் செல்ல முடியும்.

ஓலா எலக்ட்ரிக் தனது சேவை மையங்களை 50 சதவீதம் விரிவுபடுத்துவதாக அறிவித்திருக்கிறது. தற்போது நாடு முழுவதும் 414 சர்வீஸ் சென்டர்கள் உள்ளன.  ஏப்ரல் 2024க்குள் 600 சர்வீஸ் சென்டர்களை நிறுவ இலக்கு நிர்ணயித்துள்ளது. அடுத்த காலாண்டிற்குள் 10,000 ஃபாஸ்ட் சார்ஜிங் பாயிண்டுகளை அமைக்கவும் திட்டமிட்டுள்ளது.

பட்ஜெட் ஸ்கூட்டரை வெளியிடும் ஓலா.. ரூ. 89999க்கு வரும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.. தரமான சம்பவம் இருக்கு!

click me!