ஓலாவுடன் பொங்கல் கொண்டாடுங்க! எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ஆச்சரியமூட்டும் ஆஃபர்கள்!

Published : Jan 13, 2024, 07:05 PM ISTUpdated : Jan 13, 2024, 09:57 PM IST
ஓலாவுடன் பொங்கல் கொண்டாடுங்க! எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ஆச்சரியமூட்டும் ஆஃபர்கள்!

சுருக்கம்

ஓலா தனது Ola S1 X+ ஸ்கூட்டரை தொடர்ந்து ரூ.20,000 தள்ளுபடியில் ரூ. 89,999 (எக்ஸ்-ஷோரூம்) விலையில் விற்பனை செய்கிறது. இத்துடன் இன்னும் சில டீல்களும் உள்ளன.

மின்சார ஸ்கூட்டர் சந்தையில்  முன்னிலையில் இருக்கும் ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) நிறுவனம் பொங்கல் பண்டிகை காலத்தை மனதில் வைத்து பலவிதமான தள்ளுபடிகளை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்தச் சலுகைகள் ஜனவரி 15, 2024 வரை நடைமுறையில் இருக்கும்.

ஓலா தனது Ola S1 X+ ஸ்கூட்டரை தொடர்ந்து ரூ.20,000 தள்ளுபடியில் ரூ. 89,999 (எக்ஸ்-ஷோரூம்) விலையில் விற்பனை செய்கிறது. மேலும், Ola S1 Pro மற்றும் S1 Air ஸ்கூட்டர்களை வாங்கினால் ரூ.6,999 மதிப்புள்ள நீட்டிக்கப்பட்ட பேட்டரி உத்தரவாதத்தையும் இலவசமாக வழங்குகிறது.

S1 Pro மற்றும் S1 Air மின்சார ஸ்கூட்டர்களை வாங்கினால் எக்ஸ்சேஞ்ச் போனஸாக ரூ.3,000 வழங்கிறது. இத்துடன் இன்னும் சில டீல்களும் உள்ளன.

இந்தியாவில் மேலும் பல கிரிப்டோகரன்சி இணையதளங்கள் முடக்கம்!

சில குறிப்பிட்ட கிரெடிட் கார்டு EMI களில் வாங்குபவர்கள் ரூ.5,000 வரை தள்ளுபடியைப் பெறலாம். முன்பணம் செலுத்தாமல் தவணை முறையில் வாங்கவும், வட்டியில்லா தவணை முறையில் வாங்கவும், செயலாக்கக் கட்டணம் இல்லாமல் வாங்கவும் பல்வேறு ஆஃபர்கள் உள்ளன. 7.99 சதவிகிதம் வரை குறைவான வட்டி விகிதத்தில் வாகனக் கடன் பெறவும் ஓலா நிறுவனமே உதவுகிறது.

ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் கடந்த மாதம் 30,218 ஸ்கூட்டர்களை விற்பனை செய்து, ஓராண்டில் 74 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. அக்டோபர் முதல் டிசம்பர் வரையான மூன்று மாதங்களில் 83,963 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையானது. அந்தக் காலாண்டில் 48 சதவிகிதம் வளர்ச்சியை அடைந்திருப்பதாகவும் கூறியுள்ளது.

VAHAN போர்ட்டலின்படி, ஓலா நிறுவனம் 2023 ஆண்டில் 2.65 லட்சம் மாடல்களை விற்பனை செய்துள்ளது.

27ஆம் தேதிக்குள் தமிழ்நாட்டிற்கு நிவாரண நிதி: அமித் ஷா அளித்த வாக்குறுதி

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இந்த மாதம் கார் வாங்கினால் இவ்வளவு லாபமா.. ரூ.25,000 ரொக்க தள்ளுபடி + எக்சேஞ்ச் போனஸ் இருக்கு
பிரீமியம் செடான் வாங்க போறீங்களா? ஃபோக்ஸ்வேகன் விர்டஸில் ரூ.1.56 லட்சம் வரை தள்ளுபடி!