டாடா சியாரா எலக்ட்ரிக் எஸ்யூவி கார் ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 500 கிமீ தூரம் வரை பயணிக்கும் ஆற்றல் கொண்டதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டாடா சியாரா (Tata Sierra) காரை எலெக்ட்ரிக் காராக மட்டும் வெளியிடாமல், பெட்ரோல் / டீசல் மாடல் ஒன்றையும் வெளியிட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலில் டாடா சியாரா எலக்ட்ரிக் காராக மட்டுமே அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த சர்ப்ரைஸ் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டாடா சியாரா கார் இரண்டு ஆட்டோ எக்ஸ்போ நிகழ்ச்சிகளில் காட்சிப்படுத்தப்பட்டு கார் பிரியர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது. இந்நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்படும் டாடா சியாரா 2025ஆம் ஆண்டில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து, பெட்ரோல்/ டீசல் என்ஜினுடன் கூடிய காரையும் அறிமுகப்படுத்த டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.
அட்வான்ஸ்டு ஜென் 2 சிக்மா கட்டமைப்புடன் தயாராகும் சியாரா கார், மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா, ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ் கார்களுக்குப் போட்டியாக இருக்கும்.
Deepfake ஆபாசத்தைக் கட்டுப்படுத்த பேஸ்புக், யூடியூப் நிறுவனங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
சியாராவின் எலக்ட்ரிக் காரும் சிங்கிள் மற்றும் டபுள் மோட்டாருடன் இரண்டு வேரியண்ட்களைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாடா சியாரா எலக்ட்ரிக் எஸ்யூவி கார் ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 500 கிமீ தூரம் வரை பயணிக்கும் ஆற்றல் கொண்டதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
பெட்ரோ டீசலில் இயங்கும் டாடா சியாரா காரில் 1.5 லிட்டர் டிஜிடிஐ பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் ஆகியை இருக்கக்கூடும். பெட்ரோல் என்ஜின் 280 Nm டார்க் திறன் கொண்டதாக இருக்கும் எனத் தெரிகிறது. இத்துடன் டாடா சியாரா பெட்ரோல் என்ஜினுடன் 6-ஸ்பீடு மேனுவல், டிசிடி கியர்பாக்ஸ் ஆகியவை இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
ஏர்டெல் யூஸ் பண்றீங்களா? நெட்பிளிக்ஸ் உங்களுக்கு ப்ரீ தான்... மிஸ் பண்ணாதீங்க...
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும். Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D