பெங்களூருவைச் சேர்ந்த மின்சார வாகன நிறுவனமான ஆர்க்ஸா எனர்ஜீஸ் (Orxa Energies) மண்டிஸ் (Mantis) என்ற பெரிய எலெக்ட்ரிக் பைக்கை அறிமுகம் செய்துள்ளது. செய்திருக்கின்றது.
பெங்களூருவைச் சேர்ந்த மின்சார வாகன நிறுவனமான ஆர்க்ஸா எனர்ஜீஸ் (Orxa Energies) மண்டிஸ் (Mantis) என்ற பெரிய எலெக்ட்ரிக் பைக்கை அறிமுகம் செய்துள்ளது. செய்திருக்கின்றது.
இந்த பைக்கை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 221 கிமீ வரை பயணம் செய்யலாம். ஸ்போர்ட்ஸ் பைக் போன்ற ஒரு தோற்றத்தில் உருவாகியுள்ள இந்த ஆர்க்ஸா மண்டிஸ் பைக்கின் எடை 182 கிலோ மட்டுமே. எனவே இது குறைவான எடை கொண்ட மின்சார பைக்குகளில் ஒன்றாகவும் இருக்கும்.
இந்த பைக் 93 Nm டர்க்யூ திறன் கொண்ட இந்த பைக் 8.9 வினாடியில் 100 கிமீ வேகத்தை எட்டிவிடும் திறன் கொண்டது. அதிபட்சமாக மணிக்கு 135 கிமீ வேகத்தில் செல்ல முடியும்.
8.9 kWh திறன் கொண்ட பேட்டரி 5 முதல் 8 ஆண்டுகள் நீடித்து உழைக்கும் என்று ஆர்க்ஸா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.இருக்கின்றது. இந்த எலெக்ட்ரிக் பைக்கில் அதிவேகமான சார்ஜிங் வசதியும் உள்ளது.
80 சதவீதம் சார்ஜ் செய்ய 5 மணிநேரம் தான் ஆகும். 3.3 kW சார்ஜிங் பாயிண்ட் மூலம் சார்ஜ் செய்தால் 2.5 மணிநேரத்தில் 80 சதவீதம் சார்ஜ் செய்துவிடலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
8 ஆண்டுகள் பாடுபட்டு மண்டிஸ் பைக்கை உருவாக்கி இருப்பதாக ஆர்க்ஸா நிறுவனம் சொல்கிறது. விமான தயாரிப்பில் பயன்படுத்தப்படும் அலுமினியம் இந்த பைக்கைத் தயாரிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால்தான் பைக்கின் எடைக குறைவாக இருக்கிறது.
இந்த பைக்கை ரூ 10,000 முதல் முன்பணம் செலுத்தி புக் செய்யலாம். இப்போது புக் செய்தால் அடுத்த ஆண்டு இந்த எலெக்ட்ரிக் பைக் டெலிவரி செய்யப்படும். ஏப்ரல் மாதம் முதல் டெலிவரி பணிகள் ஆரம்பமாகும் என்று கூறப்படுகிறது. முதலில் பெங்களூருவிலும் பின் படிப்படியாக நாடு முழுவதும் விற்பனை விரிவுபடுத்தப்படும்.