எஸ்யூவி (SUV) ரகத்தைச் சேர்ந்த இந்தக் காரில் பயன்படுத்தப்படும் பேட்டரி மற்றும் மோட்டார்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இறக்குமதிச் செலவைக் குறைத்துள்ளதால், அதற்கு ஏற்ப காரின் விலையையும் குறைவாக நிர்ணயிக்கலாம் என்று மாருதி சுசுகி கருதுகிறது.
மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி டாடா, எம்ஜி, ஹூண்டாய், கியா போன்ற முன்னணி கார் நிறுவனங்கள் எலெக்ட்ரிக் கார் விற்பனையைத் தொடங்கியுள்ளன.
இந்நிலையில், மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் காரை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. Maruti Suzuki eVX என்ற இந்த மின்சார காரை வெளியிடுவதற்கான ஆயத்தப் பணிகளில் மாருதி நிறுவனம் தீவிரமாக உள்ளது.
எஸ்யூவி (SUV) ரகத்தைச் சேர்ந்த இந்தக் காரில் பயன்படுத்தப்படும் பேட்டரி மற்றும் மோட்டார்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இறக்குமதிச் செலவைக் குறைத்துள்ளதால், அதற்கு ஏற்ப காரின் விலையையும் குறைவாக நிர்ணயிக்கலாம் என்று மாருதி சுசுகி கருதுகிறது.
அதிவேக சார்ஜிங் வசதியுடன் 221 கி.மீ. ரேஞ்ச் கொடுக்கும் ஆர்க்ஸா மண்டிஸ் எலெக்ட்ரிக் பைக்!
ரூ.14.74 லட்சம் முதல் ரூ.19.94 லட்சம் வரை விற்பனையாகும் டாடா நெக்ஸான் (Tata Nexon EV) எலெக்ட்ரிக் கார் மாருதியின் எலெக்ட்ரிக் காருக்குப் போட்டியாக இருக்கும். மாருதி சுசுகியின் Maruti Suzuki eVX காரும் ஏறத்தாழ இதே விலையைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.
மாருதி சுசுகியின் Maruti Suzuki eVX எலக்ட்ரிக் கார் ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை விலையில் அறிமுகம் செய்யப்படலாம். ஆரம்ப விலையே ரூ.20 லட்சம் வரை இருக்கும் என்றும் டாப் வேரியண்ட் ரூ.25 லட்சம் வரையில் இருக்கலாம் என்றும் மற்றொரு தகவல் தெரிவிக்கிறது.
மாருதியில் முதல் மின்சார கார் 48 kWh பேட்டரியுடன் 400 கி.மீ. ரேஞ்ச் கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது. இதனால் இந்தக் காரில் நீண்ட தூரப் பயணங்களையும் மேற்கொள்ளலாம் என்று வல்லுநர்கள் கருதுகின்றனர். ஆனால் 2024ஆம் ஆண்டின் கடைசியில் தான் மாருதி சுஸுகி இவிஎக்ஸ் எலக்ட்ரிக் கார் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது. இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இந்தக் கார் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும். Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D