பட்டி தொட்டி எல்லாம் தூள் பறக்கும் சேல்ஸ்! மாருதி சுஸுகியின் வெற லெவல் பிளான்!!

By SG BalanFirst Published Aug 24, 2024, 10:37 PM IST
Highlights

"நெக்ஸா ஸ்டுடியோவை நிறுவுவதன் மூலம் சிறிய நகரங்களில் விற்பனையை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே நெக்ஸாவின் விற்பனையில் 37% 2ஆம் மற்றும் 3ஆம் கட்ட நகரங்களில் உள்ளன" என்று பானர்ஜி கூறினார்.

மாருதி சுஸுகி அதன் நெக்ஸா சில்லறை விற்பனை நிலையங்களை கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தியது. வாடிக்கையாளர்களுக்கு மிகவும் உயர்தர அனுபவத்தை வழங்கும் நோக்கத்துடன் இந்த விற்பனை நிலையங்களைக் கொண்டுள்ளது.

நாடு முழுவதும் 500 நெக்ஸா விற்பனை நிலையங்களை நிறுவிய மாருதி சுஸுகி இப்போது தனது நெக்ஸா ஸ்டுடியோக்களை இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்களுக்கு விரிவுபடுத்த இருப்பதாக அறிவித்துள்ளது.

Latest Videos

இந்த புதிய நெக்ஸா ஸ்டூடியோ விற்பனை நிலையங்கள் நெக்ஸாவுக்கு இணையான பிரீமியம் அனுபவத்தைப் வழங்கும். இதன் மூலம் நாட்டின் சிறிய நகரங்களுக்கும் விற்பனையை விரிவுபடுத்த முடியும் என்று கருதுகிறது. மாருதி சுஸுகி இந்தியாவின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை பிரிவு மூத்த செயல் அதிகாரி பார்த்தோ பானர்ஜி, இந்த ஆண்டு இறுதிக்குள் 100 நெக்ஸா ஸ்டுடியோக்களை அமைக்க உள்ளதாக அறிவித்தார்.

மாருதி சுஸுகி தனது Ignis, Baleno, Fronx, Ciaz, Grand Vitara, XL6 ஆகிய பிரீமியம் கார்களுடன் சமீபத்திய ஜிம்னி மற்றும் இன்விக்டோ கார்களையும் நெக்ஸா ஸ்டோர்களில் விற்பனை செய்கிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! 50% பென்ஷனுக்கு கேரண்டி கொடுக்கும் திட்டத்துக்கு ஒப்புதல்!!

“மாதத்திற்கு 25-30 யூனிட்டுகளுக்கு மேல் விற்பனை இல்லாத பகுதிகளில் NEXA ஸ்டுடியோ என்ற சிறிய விற்பனை நிலையங்கள் திறக்கப்படும். இந்த ஸ்டுடியோக்கள் விற்பனை, சேவை மற்றும் உதிரிபாகங்களை உள்ளடக்கியவையாக இருக்கும். சிறிய நகரங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு நீண்ட தூரம் பயணம் செய்யாமல் முழுமையான NEXA அனுபவத்தை வழங்கும்" என்று பார்த்தோ பானர்ஜி விளக்கியுள்ளார்.

நடப்பு நிதியாண்டின் பிற்பகுதியில் இதுபோன்ற நெக்ஸா ஸ்டுடியோ தினமும் ஒன்று வீதம் திறக்கத் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். சிறிய நகரப் பகுதிகளில் நெக்ஸா நெட்வொர்க்கை விரிவுபடுத்தும் திட்டம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த நெக்ஸா ஸ்டுடியோக்கள் மாதத்திற்கு 20 முதல் 25 கார்களை விற்பனை செய்யும் என்று நிறுவனம் எதிர்பார்க்கிறது.

"நெக்ஸா ஸ்டுடியோவை நிறுவுவதன் மூலம் சிறிய நகரங்களில் விற்பனையை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே நெக்ஸாவின் விற்பனையில் 37% 2ஆம் மற்றும் 3ஆம் கட்ட நகரங்களில் உள்ளன" என்று பானர்ஜி கூறினார்.

ஐபோன் 16 சீரிஸ் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு! கூடவே களமிறங்கும் புதிய ஏர்பாட், ஆப்பிள் வாட்ச்!

click me!