
மாருதி சுஸுகி அரினா, தங்கள் பிரபலமான மாடல்களான வாகன்ஆர், ஆல்டோ K10, செலிரியோ, ஸ்விஃப்ட், டிசையர், பிரெஸ்ஸா, ஈக்கோ ஆகியவற்றில் முக்கிய பாதுகாப்பு அம்சமாக ஆறு ஏர்பேக்குகளை நிலையானதாக வழங்குவதாக அறிவித்துள்ளது. புதுப்பிக்கப்பட்ட மாடல்கள் நாடு முழுவதும் உள்ள மாருதி சுஸுகி அரினாவின் அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப்களில் கிடைக்கின்றன. எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESP), ஹில் ஹோல்ட் அசிஸ்ட், ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ABS), எலக்ட்ரானிக் பிரேக்-ஃபோர்ஸ் டிஸ்ட்ரிபியூஷன் (EBD) உள்ளிட்ட மேம்பட்ட பாதுகாப்பு தொழில்நுட்பங்களுடன் இந்த பாதுகாப்பு மேம்பாடு வருகிறது.
இந்த புதிய முயற்சியை அறிவித்ததன் மூலம், ஆறு ஏர்பேக்குகளின் நன்மைகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க, கார் உற்பத்தியாளர் ஒரு விரிவான பிரச்சாரத்தையும் தொடங்கியுள்ளார். இந்த பிரச்சாரம், ஆறு ஏர்பேக்குகள் பொருத்தப்பட்ட மாருதி சுஸுகி அரினா வாகனத்தில் பாதுகாப்பு என்ற கருத்தை வலியுறுத்துகிறது. இது நிறுவனத்தின் பாதுகாப்பிற்கான அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்துகிறது.
இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் நவீன சாலை உள்கட்டமைப்பு, அதிவேக எக்ஸ்பிரஸ்வேகள், வளர்ந்து வரும் மொபிலிட்டி முறைகள் ஆகியவை வலுவான பாதுகாப்பு நடவடிக்கைகளின் அவசியத்தை முன்னெப்போதையும் விட அதிகரித்துள்ளதாக மாருதி சுஸுகி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் மூத்த நிர்வாக அதிகாரி பார்த்தோ பானர்ஜி தெரிவித்தார். வளர்ந்து வரும் நுகர்வோர் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதற்கும், உயர் தரமான பாதுகாப்பை வழங்குவதற்கும் மாருதி சுஸுகி உறுதிபூண்டுள்ளது. வாகன்ஆர், ஆல்டோ K10, செலிரியோ, ஈக்கோ ஆகியவற்றில் 6 ஏர்பேக்குகளை நிலையானதாக வழங்குவதன் மூலம், அனைவருக்கும் சிறந்த பாதுகாப்பு கிடைப்பதை உறுதி செய்கிறோம். இந்த மாடல்களின் பரந்த பிரபலத்தை கருத்தில் கொண்டு, இந்த நடவடிக்கை பல வாகன உரிமையாளர்களின் பாதுகாப்பு தரங்களை கணிசமாக உயர்த்தும் மற்றும் நாடு முழுவதும் பயணிகளின் பாதுகாப்பிற்கு முழுமையாக பங்களிக்கும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
மாருதி சுஸுகி அரினா பயணிகள் வாகன வரிசையில் பல பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. சமீபத்திய 6 ஏர்பேக்குகள் பாதுகாப்பு அம்சத்தில் இரட்டை முன் ஏர்பேக்குகள், பக்க ஏர்பேக்குகள், கர்டன் ஏர்பேக்குகள் ஆகியவை அடங்கும். அதிகபட்ச பலன்களைப் பெறுவதற்காக, சீட் பெல்ட் நினைவூட்டல்களுடன் அனைவருக்கும் 3-புள்ளி சீட் பெல்ட்கள் உட்பட அனைத்து சுற்று பாதுகாப்பையும் வழங்க 6-ஏர்பேக் பாதுகாப்பு அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.