10 மாதத்தில் 1 லட்சம் கார்கள் விற்பனை! விற்பனையில் அசத்தும் மாருதி Baleno

Published : Feb 28, 2025, 07:29 PM IST
10 மாதத்தில் 1 லட்சம் கார்கள் விற்பனை! விற்பனையில் அசத்தும் மாருதி Baleno

சுருக்கம்

மாருதி சுசுகி பலேனோ பிரீமியம் ஹாட்ச்பேக் செக்மென்ட்டில் முன்னணியில் உள்ளது. இந்த கார் கடந்த 10 மாதங்களில் 1,39,324 விற்பனையாகி உள்ளது. பாதுகாப்பு அம்சங்களும், சூப்பரான எஞ்சின் ஆப்ஷன்களும் இதன் விற்பனையை அதிகரிக்கிறது.

மாருதி சுசுகி பலேனோ சந்தையில் விற்பனையில் அசத்துகிறது. பிரீமியம் ஹேட்ச்பேக் செக்மென்டில் பலேனோவுக்கு பயங்கர டிமாண்ட். இந்த கார் கடந்த 10 மாதங்களில் அததிகம் விற்பனையாகி உள்ளது. 2024 ஏப்ரல் மாதத்தில் இருந்து 2025 ஜனவரி வரைக்கும் 10 மாதங்களில் 1,39,324 கார்கள் விற்பனையாகி உள்ளது. இந்த செக்மென்ட்டில் டாடா அல்ட்ரோஸ், டொயோட்டா க்ளான்சா, ஹூண்டாய் i20 உடன் பலேனோ போட்டி போடுகிறது. இதன் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை 6.70 லட்சம் ரூபாய். இந்த 10 மாதங்களில் மஹிந்திரா ஸ்கார்பியோ, மாருதி டிசையர், டாடா நெக்ஸான், மாருதி ஃபிரோங்க்ஸ், ஹூண்டாய் வென்யூ மாதிரியான மாடல்களை இந்த கார் பின்னுக்கு தள்ளியுள்ளது.

பாதுகாப்புக்கு, மாருதி பலேனோவில் 6 ஏர்பேக்கள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி ப்ரோக்ராம் (ESP), ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட், 360-டிகிரி கேமரா, EBD உள்ள ABS, ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ், ரிவர்சிங் கேமரா, ரியர் பார்க்கிங் சென்சார் மாதிரியான வசதிகள் உள்ளது. சிக்மா, டெல்டா, சீட்டா, ஆல்பா என 4 வேரியண்ட்களில் பலேனோ விற்பனையாகிறது. இதன் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை 6.70 லட்சம் ரூபாய்.

பலேனோவுக்கு 1.2 லிட்டர், 4 சிலிண்டர் K12N பெட்ரோல் எஞ்சின் பவர் வழங்குகிறது. இந்த எஞ்சின் 83 bhp பவரை வழங்கும். அதே நேரம், இன்னொரு ஆப்ஷனாக 90 bhp பவர் வழங்குகிற 1.2 லிட்டர் டூயல்ஜெட் பெட்ரோல் எஞ்சின் இருக்கும். இதற்கு மேனுவல், ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்ஸ் உள்ளது. 1.2 லிட்டர் டூயல் ஜெட் பெட்ரோல் எஞ்சின் பலேனோ சிஎன்ஜியில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 78ps பவரையும், 99nm பீக் டார்க்கையும் வழங்குகிறது.

பலேனோக்கு 3990 எம்எம் நீளமும், 1745 எம்எம் அகலமும், 1500 எம்எம் உயரமும், 2520 எம்எம் வீல்பேஸும் உள்ளது. புது பலேனோவின் ஏசி வென்ட்ஸ் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஃப்ரீ-ஸ்டாண்டிங் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. இந்த பிரீமியம் ஹாட்ச்பேக்கில் 360 டிகிரி கேமரா இருக்கும். இதற்கு 9 இன்ச் ஸ்மார்ட் பிளே ப்ரோ பிளஸ் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இருக்கும். இந்த இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே சப்போர்ட் செய்யும்.

PREV
click me!

Recommended Stories

ரூ.1.65 லட்சம் தள்ளுபடி.. 293 கிமீ ரேஞ்ச் கொண்ட மலிவு விலை டாடா எலக்ட்ரிக் கார்
கருப்பு - தங்க நிறத்தில் மின்னும் ஸ்பெஷல் RDX எடிஷன்.. டிவிஎஸ் கொடுத்த திடீர் சர்ப்ரைஸ்