இது டிஸ்கவுண்ட் ஜனவரி.. ரூபாய் 47,000 வரை ஆஃபர்களை தரும் Maruti Suzuki - எந்தெந்த கார்களுக்கு தெரியுமா?

Ansgar R |  
Published : Jan 09, 2024, 05:51 PM IST
இது டிஸ்கவுண்ட் ஜனவரி.. ரூபாய் 47,000 வரை ஆஃபர்களை தரும் Maruti Suzuki - எந்தெந்த கார்களுக்கு தெரியுமா?

சுருக்கம்

Maruti Suzuki Offer : பிரபல மாருதி சுசூக்கி நிறுவனம் இந்த ஜனவரி மாதம், தன்னுடைய குறிப்பிட்ட சில கார்களுக்கு ரூபாய் 47,000 வரை அதிரடி ஆஃபர்களை வழங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மாருதி சுஸுகி ஆல்டோ கே10

Maruti Alto K10 அதன் அனைத்து பெட்ரோல் மற்றும் CNG வகைகளிலும் ரூ.47,000 வரை தள்ளுபடியை பெறுகின்றது. இதில் ரூ.25,000 வரையிலான கேஷ் பெனிபிட்ஸ் பெறலாம், ரூ.15,000 வரையிலான எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.7,000 வரை கார்ப்பரேட் தள்ளுபடி ஆகியவை அடங்கும். ஆல்டோ கே10 1.0 லிட்டர் மூன்று சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் மூலம் 67hp மற்றும் 89Nm டார்க்கை வெளிப்படுத்தும். இந்த எஞ்சின் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 5-ஸ்பீடு AMT கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

மாருதி சுசுகி எஸ் பிரஸ்ஸோ

Maruti Suzuki S Presso ஆனது, ஆல்டோவைப் போலவே அதே 67hp, 1.0-லிட்டர் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது, மேலும் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது AMT கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது மற்றும் CNG மாறுபாட்டையும் பெற்றுள்ளது. S Presso-வின் அனைத்து பெட்ரோல் வகைகளும் ரூ. 44,000 வரை தள்ளுபடியைப் பெறுகின்றன, இதில் ரூ. 23,000 வரை கேஷ் பெனிபிட்ஸ், ரூ. 15,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ. 6,000 வரை கார்ப்பரேட் தள்ளுபடி ஆகியவை அடங்கும். 

மிக குறைந்த விலையில் விற்பனையாகும் ப்ரிமோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.. எவ்வளவு விலை தெரியுமா?

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்

ஸ்விஃப்ட் இந்த மாதம் ரூ. 37,000 வரை பலன்களைப் பெறுகிறது, ரூ. 10,000 வரையிலான கேஷ் பெனிபிட்ஸ், ரூ. 20,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ. 7,000 வரை கார்ப்பரேட் தள்ளுபடி. இதற்கிடையில், சிஎன்ஜி வகைகளுக்கு ரூ. 15,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது. ஸ்விஃப்ட் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் விருப்பங்களுடன் வரும் 90 ஹெச்பி, 1.2 லிட்டர் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இது சமீபத்தில் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் மற்றும் டாடா டியாகோவுக்கு போட்டியாக உள்ளது.

மேலும் பல கார்களுக்கு மாருதி சுசூக்கி நிறுவனம் தள்ளுபடியை அறிவித்துள்ளது, ஆனால் இவை ஓவ்வொரு மாநிலங்களுக்கும் மாறும்.

ராயல் என்ஃபீல்டுக்கு சவால் விடும் 5 பைக்குகள் இதுதான்.. விலையும் ரொம்ப கம்மிதான்..

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

நாயகன் மீண்டும் வரார்.. புதிய அவதாரத்தில் மிரட்ட தயார்.. ஸ்கெட்ச் போட்ட ரெனால்ட்
குறைந்த விலை கார் வாங்க நல்ல நேரம்.. க்விட் மீது பெரிய சலுகை.. ரூ.70,000 வரை தள்ளுபடி