
மாருதி சுசூகி இந்தியா லிமிடெட் (MSIL) 2025 கிராண்ட் விட்டாரா CNG-ஐ இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. ₹13.48 லட்சம் ஆரம்ப விலையில் கிடைக்கும் இந்த மாடலில் ஆறு ஏர்பேக்குகள், ABS, EBD, ஹில் ஹோல்ட் அசிஸ்ட், ESP, முன் மற்றும் பின்புற டிஸ்க் பிரேக்குகள், ஐசோஃபிக்ஸ் சைல்ட் சீட் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.
டெல்டா, ஜீட்டா என இரண்டு வகைகளில் கிடைக்கும் 2025 மாருதி கிராண்ட் விட்டாரா CNG-ன் விலை முறையே ₹13.48 லட்சம் மற்றும் ₹15.62 லட்சம். 1.5 லிட்டர் K15 என்ஜினைக் கொண்ட இந்த மாடல் CNG-யில் 88 hp பவரையும், 121.5 Nm டார்க்கையும் வழங்குகிறது. பெட்ரோலில் 103 hp பவரையும், 136 Nm டார்க்கையும் வழங்குகிறது. 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. கிலோவுக்கு 26.6 கி.மீ மைலேஜ் வழங்குவதாக மாருதி சுசூகி தெரிவித்துள்ளது.
புதிய 2025 கிராண்ட் விட்டாரா S-CNG மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் ஆறு ஏர்பேக்குகளையும் வழங்குவதாக மாருதி சுசூகி இந்தியா லிமிடெட் மார்க்கெட்டிங் மற்றும் விற்பனை சீனியர் நிர்வாக அதிகாரி பார்த்தோ பானர்ஜி தெரிவித்தார். புதிய தலைமுறை K-சீரிஸ் 1.5 லிட்டர் டூயல் ஜெட் டூயல் VVT என்ஜின் சிறந்த மைலேஜை வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
2025 கிராண்ட் விட்டாரா S-CNG-யில் PM 2.5 டிஸ்ப்ளேவுடன் கூடிய ஆட்டோ ஏர் பியூரிஃபையர், 9-இன்ச் ஸ்மார்ட்பிளே புரோ+ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், கிளாரியன் பிரீமியம் சவுண்ட் சிஸ்டம், டயர் பிரஷர் மோனிட்டரிங் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, வயர்லெஸ் சார்ஜிங், வென்டிலேட்டட் முன் சீட்டுகள், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், பின்புற AC வென்ட்கள், 60:40 ஸ்பிளிட் பின்புற சீட், கீலெஸ் என்ட்ரி, ஆட்டோ-ஃபோல்டிங் ORVM-கள், சுசூகி கனெக்ட் போன்ற அம்சங்கள் உள்ளன.