500 கி.மீ ரேஞ்ச்.. ஆட்டமே மாறப்போகுது.. இ-விட்டாரா வருது.. வேற லெவல் அம்சங்கள்

Published : Dec 02, 2025, 10:22 AM IST
Maruti e Vitara

சுருக்கம்

மாருதி சுசுகி தனது முதல் முழு எலக்ட்ரிக் எஸ்யூவி இ-விட்டாராவை அறிமுகப்படுத்துகிறது. 500 கிமீ ரேஞ்ச், லெவல்-2 ADAS போன்ற மேம்பட்ட அம்சங்களுடன் வருகிறது இந்த கார்.

இந்திய எலக்ட்ரிக் வாகன துறையில் ஒரு முக்கிய மாற்றம் ஏற்படப் போகிறது. மாருதி சுசுகி தனது முதல் முழு மின்சார எஸ்யூவி இ-விட்டாராவை இன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்துகிறது. ஏற்கனவே சில நாடுகளுக்கு அனுப்பப்பட்ட மாடல்கள் வழியாக இந்த காரின் அம்சங்கள் வெளியிடப்பட்டுள்ளன. குஜராத் ஆலையிலிருந்து உற்பத்தி துவங்கியுள்ள இந்த வாகனம் நெக்ஸா ஷோரூம்கள் மூலம் விற்பனை செய்யப்படும்.

இ-விட்டாராவின் மிகப்பெரிய பலம் ரேஞ்ச். BYD வழங்கும் இரண்டு LFP பேட்டரி ஆப்ஷன்கள் இதில் கிடைக்கும். 48.8 kWh கொண்ட அடிப்படை பேட்டரி மற்றும் 61.1 kWh கொண்ட பெரிய பேட்டரி என இரு ஆப்ஷன்கள் உள்ளன. பெரிய பேட்டரி ஒரு சார்ஜில் 500 கிலோமீட்டருக்கும் மேலான பயணத்தைக் கொடுக்கலாம் என நிறுவனம் கூறுகிறது. மேலும், ஃபாஸ்ட் சார்ஜிங் முறையில் 50 நிமிடங்களில் 0 முதல் 80% வரை சார்ஜ் செய்ய முடியும்.

அம்சங்களைப் பொருத்தவரை, இ-விட்டாரா இன்றைய புதிய தலைமுறை கார்கள் அனைத்து சிறப்புகளையும் கொண்டுள்ளது. 10.25 அங்குல டச்ஸ்கிரீன், வயர்லெஸ் Apple CarPlay / Android Auto இணைப்பு, 10.1 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 10 வழி மின்சார அளவைத்திருக்கும் சீட் போன்றவை பயனருக்கு வசதி வழங்குகிறது. ஏழு ஏர்பேக்குகள், லெவல்-2 ADAS மற்றும் 360° கேமரா ஆகியவை உயர் தர பாதுகாப்பையும் தொழில்நுட்ப வசதியையும் சேர்க்கிறது.

பாதுகாப்பு அம்சங்களில் மாருதி எந்த சமரசமும் செய்யவில்லை. எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP), 6 ஏர்பேக்குகள் மற்றும் தனிப்பட்ட டிரைவர் முழங்கால் ஏர்பேக் கூட சேர்க்கப்பட்டுள்ளது. ADAS தொகுப்பில் கொண்டுள்ள லென் வார்னிங், அடாப்டிவ் குரூஸ் கண்ட்ரோல், எமர்ஜென்சி ஆட்டோ பிரேக்கிங், ஹை பீம் அசிஸ்ட் போன்ற அம்சங்கள் ஓட்டுநர் பாதுகாப்பை பலப்படுத்துகின்றன.

விலை குறித்து எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இ-விட்டாராவின் ஆரம்பம் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.17 லட்சத்தை தாண்டும் என கார் துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. அம்சங்களும் ரேஞ்சும் கருத்தில் கொண்டு இதை ஒரு பிரீமியம் EV எனக் காணலாம்.

போட்டியும் கடுமையாக இருக்கும். இந்த EV சந்தையில் Tata Curve EV, Harrier EV, Hyundai Creta Electric, Mahindra XUV.e9, BE.06 மற்றும் MG ZS EV போன்ற மாடல்கள் ஏற்கனவே கண்காணிக்கப்படுகின்றன. எனினும், மாருதியின் பிராண்ட் நம்பிக்கையும், சேவை பிணையமும் இ-விட்டாராவிற்கு பலமாக அமையும்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ரூ.1.76 லட்சம் தள்ளுபடியில் ஹோண்டா எலிவேட்.. இந்த ஆண்டின் மிகப்பெரிய தள்ளுபடி.!
ரூ.85,000 வரை சேமிக்கலாம்.. ரூ.6 லட்சத்திற்குள் ஹூண்டாய் காரை வாங்கலாம்.!