Mahindra : டாடா நிறுவனத்தை போல இந்தியர்கள் மத்தியில் மஹிந்திரா நிறுவன கார்களுக்கு ஒரு தனி மவுசு உண்டு. அதிலும் மஹிந்திரா நிறுவனத்தின் SUV ரக கார்களுக்கு ஒரு பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.
மஹிந்திரா தனது மேம்படுத்தப்பட்ட XUV300 கார்களை XUV3XO என்ற பெயரில் வரும் ஏப்ரல் மாதம் 29ம் தேதி நடைபெறும் ஒரு விழாவில் அறிமுகம் செய்யவுள்ளது. மேலும் அந்த கார்கள் இந்த மாத இறுதியில் வெளியிட தயாராகி வருவதால், மஹிந்திராவின் டீலர்ஷிப்கள், XUV300ன் விற்கப்படாத MY2023 ஸ்டாக்கில் பெரும் சலுகைகளை அளிக்க முடிவு செய்துள்ளது.
இந்த பலன்களானது, ரொக்க தள்ளுபடிகளாகவும், Extended வாரண்ட்டி கொண்ட மஹிந்திரா நிறுவனத்தின் உத்தியோகபூர்வ பாகங்களாவும் அளிக்கப்படவுள்ளது. புதிய கார் லாஞ்சு ஆகா உள்ள நிலையில், பொதுவாக கார் தயாரிப்பு நிறுவனங்கள், விற்காத தங்கள் (சற்று) பழைய மாடல் கார்களை இப்படி பெரிய அளவிலான தள்ளுபடியில் விற்பனை செய்வது வழக்கமான ஒன்று தான்.
மஹிந்திராவின் நேரடி போட்டியாளர்களான Kia நிறுவனத்தின் Sonet ரக கார்கள் மற்றும் Tataவின் Nexon ரக கார்கள் கூட இந்த மாதம் சுமார் ரூ.1.59 லட்சம் வரை தள்ளுபடிகள் மற்றும் பலன்களை, தேர்ந்தெடுக்கப்பட்ட டிரிம் மற்றும் பவர்டிரெய்னைப் பொறுத்து வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. டாப்-ஸ்பெக் W8 வடிவத்தில் விற்கப்படாத 2023 XUV300 பெட்ரோல் கார்கள் தான் அதிகபட்ச நன்மைகளைப் பெறுகிறது.
டீசல் W8 வகைகளுக்கு ரூ. 1.57 லட்சம் வரை தள்ளுபடி கிடைக்கும், அதே சமயம் ரேஞ்ச்-டாப்பிங் MY23 XUV300 TGDi மாடல்கள் ரூ.1.50 லட்சம் வரை தள்ளுபடியில் கிடைக்கும். இதற்கிடையில், W6 டிரிம்கள் ரூ. 94,000 முதல் ரூ. 1.33 லட்சம் வரை தள்ளுபடியைக் கொண்டுள்ளன, தேர்ந்தெடுக்கப்பட்ட பவர்டிரெய்னைப் பொறுத்து, W4 வகைகள் ரூ. 54,000-95,349 வரையிலான நன்மைகளைப் பெறுகின்றனர்.
போன் பேசிகிட்டே ஸ்கூட்டர் ஓட்டலாம்.. ஹாலோ ஸ்மார்ட் ஹெல்மெட்டை அறிமுகப்படுத்திய ஏத்தர் எனர்ஜி..