Mahindra : இந்திய சந்தையில் இப்பொது எலக்ட்ரிக் வகை கார்களின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், முன்னணி நிறுவனங்களும் தங்களுடைய கார்களில் எலக்ட்ரிக் வகையை அறிமுகம் செய்து வருகின்றனர்.
மஹிந்திரா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான ராஜேஷ் ஜெஜூரிகர் பேசுகையில், 'அனைத்து ICE பிராண்டுகளும் காலப்போக்கில் மின்மயமாக்கப்படும்' என்று கூறினார். மேலும் குறிப்பாக தங்களது பொலிரோ மற்றும் ஸ்கார்பியோவை மின்மயமாக்க திட்டமிட்டுள்ளதாக நேற்று நடந்த முதலீட்டாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.
கூடுதலாக, மஹிந்திரா கடந்த ஆகஸ்ட் மாதம் Thar.e காருக்கான கான்செப்ட்டைக் காட்சிப்படுத்தியது நினைவுகூரத்தக்கது. அத புதிய கார் 2,775 மிமீ மற்றும் 2,975 மிமீக்கு இடையே வீல்பேஸ் கொண்டதாகக் கூறப்படுகிறது. மேலும் இதே அளவு அனைத்து எலக்ட்ரிக் மாடல் ஸ்கார்பியோ மற்றும் பொலேரோவில் பயன்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
undefined
மஹிந்திராவின் மற்ற EVகளைப் போலவே, இந்த இரண்டு புதிய மாடல்களும் அதே வடிவமைப்பிலான பேட்டரி பேக்குகள் மற்றும் மோட்டார்களைப் கொண்டிருக்கலாம். Thar.e கான்செப்ட் காட்சிப்படுத்தப்பட்டதில் 109hp/135Nm முன்புறம் மற்றும் 286hp/535Nm பின்புற மோட்டார் இருந்தது. இது AWD திறனை அளிக்கிறது.
ஆனால் அந்த நேரத்தில் அதன் பேட்டரி விவரக்குறிப்புகள் வெளியிடப்படவில்லை, ஆனால் அந்த கார் 60kWh அல்லது 80kWh பேக்கைக் கொண்டிருக்கும் என்று மஹிந்திரா தெரிவித்துள்ளது. இது ஒருபுறம் இருக்க, பொலிரோ டீசல் மாடல் இப்பொது முழுவதுமாக மாற்றியமைக்க தயாராகி வருகிறது. மஹிந்திரா நிறுவனம் U171 என்றழைக்கப்படும் அடுத்த தலைமுறை லேடர்-பிரேம் கட்டமைப்பை அறிமுகப்படுத்த தயாராக உள்ளது.
ஆகவே அடுத்த ஜென் பொலிரோ, எதிர்வரும் 2026-27க்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அந்த வரிசையில் குறைந்தது மூன்று SUVகள் இருக்கக்கூடும், இது மஹிந்திராவின் வருடாந்திர தொகுதிகளை சுமார் 1.5 லட்சம் யூனிட்களைக் கொண்டு வரக்கூடும் என்று கூறப்படுகிறது.
குடும்பத்தோட ஜாலியாக பயணிக்கலாம்! கம்மி பட்ஜெட்டில் விசாலமான 7 சீட்டர் ரெலானால்ட் ட்ரைபர் கார்!