இவ்ளோ காசுல புது கார் வாங்கலாமே! லம்போர்கினி கார்ல பேபி ஸ்ட்ரோலர் வேறயா?

Published : Mar 14, 2025, 11:45 AM IST
 இவ்ளோ காசுல புது கார் வாங்கலாமே! லம்போர்கினி கார்ல பேபி ஸ்ட்ரோலர் வேறயா?

சுருக்கம்

குழந்தைகளை உட்கார வச்சு தள்ளுற ஸ்ட்ரோலர் இப்போ சாதாரண விஷயம். ரெண்டாயிரம் ரூபாயில இருந்து நாற்பது, ஐம்பதாயிரம் ரூபாய் வரைக்கும் ஸ்ட்ரோலர் மார்க்கெட்ல இருக்கு. ஆனா, பிரபலமான கார் பிராண்டான லம்போர்கினி இப்போ பேபி ஸ்ட்ரோலர் லான்ச் பண்ணிருக்காங்க. அதோட விலைய தெரிஞ்சுக்குங்க.

சின்ன குழந்தைய தூக்கிட்டு சுத்துற காலம் மாறி எவ்ளோ வருஷம் ஆச்சு. இப்போ குழந்தைய உட்கார வச்சு சுத்திக்கிட்டு வர பேபி ஸ்ட்ரோலர் சகஜம். இந்தியால ரெண்டாயிரம் ரூபாயில இருந்து பேபி ஸ்ட்ரோலர் விலை ஆரம்பிக்குது. இதவிட கம்மியான விலையில கூட ஸ்ட்ரோலர் கெடைக்குது. இன்னும் நல்ல குவாலிட்டி, உழைப்பு, கலரு, குஷன் இதெல்லாம் அதிகமா இருந்தா விலையும் ஏறும். இருபதாயிரம், நாற்பதாயிரம், ஐம்பதாயிரம் ரூபாயில பேபி ஸ்ட்ரோலர் பத்தி கேள்விப்பட்டிருப்போம். ஆனா இப்போ பிரபலமான கார் பிராண்டான லம்போர்கினி இப்போ பேபி ஸ்ட்ரோலர் ப்ராடக்ட் லான்ச் பண்ணிருக்காங்க. இதோட விலை இப்போ பயங்கரமா பேசப்படுது.

லம்போர்கினி பேபி ஸ்ட்ரோலர் விலை எவ்ளோ?

லம்போர்கினி கார் பிராண்ட் இப்போ பிரிட்டிஷ் நர்சரி பிராண்ட் சில்வர் கிராஸ் கூட பார்ட்னர்ஷிப் பண்ணிருக்காங்க. இதன் மூலமா லம்போர்கினி சூப்பரான குவாலிட்டியான பேபி ஸ்ட்ரோலர் ரிலீஸ் பண்ணிருக்காங்க. ரொம்ப காஸ்ட்லியான லம்போர்கினி கார் வச்சிருக்க ஃபேமிலி, குழந்தையோட போகும்போது லம்போர்கினி விட்டுட்டு வேற பிராண்ட் பேபி ஸ்ட்ரோலர் யூஸ் பண்ணா எப்படி இருக்கும்? அதனால இப்போ லம்போர்கினி தன்னோட பிராண்ட்லேயே பேபி ஸ்ட்ரோலர் ரிலீஸ் பண்ணிருக்காங்க. இதோட விலை ஏறக்குறைய 5 லட்சம் ரூபாய்.

லம்போர்கினி பிராண்ட்

லம்போர்கினி கார் பிராண்டோட பேபி ஸ்ட்ரோலர் வாங்கணும்னா கரெக்டா 5 லட்சம் ரூபாய் கொடுக்கணும். இந்தியால இந்த விலைக்கு சின்ன ஹேட்ச் பேக் கார் கெடைக்கும். அது மட்டும் இல்ல இந்தியால அதிகமா விக்கிற கார்கள்ல சின்ன கார்களோட எண்ணிக்கையும் அதிகமா இருக்கு. ஆனா இங்க விலைய விட பிராண்ட் முக்கியமான ரோல் பண்ணுது. லம்போர்கினி கார்கள் ஆரம்பிக்கிறதே 3.5 கோடி ரூபாயில இருந்து இன்னும் அதிகபட்சம் 8.5 கோடி ரூபாய். இது எக்ஸ் ஷோ ரூம் விலை. அதனால இந்த மொத்தத்துக்கு கம்பேர் பண்ணா 5 லட்சம் ரூபாய் பெரிய விலை இல்ல. 

லம்போர்கினி பேபி ஸ்ட்ரோலர் ஸ்பெஷல் என்ன?

5 லட்சம் ரூபாய் விலையுள்ள லம்போர்கினி பேபி ஸ்ட்ரோலர்ல நிறைய ஸ்பெஷல் இருக்கு. பிராண்ட் மட்டும் இல்ல. சூப்பரான குவாலிட்டியோட நிறைய ஃபீச்சர்ஸ் இதுல இருக்கு. முக்கியமா இது தரை, ரோடு, நடைபாதை உட்பட நிறைய குழந்தைகளை கூட்டிட்டு போற எல்லா இடத்துக்கும் சரியா இருக்கும். எல்லா வழிலயும் யூஸ் பண்ணுற மாதிரி சக்கரங்கள யூஸ் பண்ணிருக்காங்க. இதோட சக்கரங்கள் முழு சஸ்பென்ஷன் வச்சிருக்கு. அதனால ரோடு எப்படி இருந்தாலும் உட்கார்ந்திருக்க குழந்தைக்கு எந்த பிரச்சனையும் இருக்காது.

பேபி ஸ்ட்ரோலர் அம்சங்கள்

லம்போர்கினி சூப்பர் கார்கள் மாதிரி பிரேக் பெடல் கூட இந்த பேபி ஸ்ட்ரோலருக்கு கொடுத்திருக்காங்க. இத்தாலியன் லெதர், கார்ல இருக்குற மாதிரி ஆரஞ்சு ஸ்டிச், ஸ்லீக் பிளாக் ஃபேப்ரிக்ஸ், பேபி கேரிகாட், புஷ் சேர் சீட், சூரியனோட வெளிச்சம் குழந்தைக்கு படாத மாதிரி சன் சைல், கொசு வலை, கூடவே மழை வந்தாலும் குழந்த கொஞ்சம் கூட நனையாத மாதிரி ரெயின் கவர் கூட இருக்கு. லம்போர்கினியோட கார் தயாரிக்கிறதுக்கு ரொம்ப நாள் ஆகும்.

முன்பதிவு

இதோட டிசைனுக்கு வருஷக்கணக்குல ஆகும். அதுக்கப்புறம் உற்பத்தி, டெஸ்டிங்னு வருஷங்கள் ஓடும். ஸ்பெஷல் என்னன்னா இந்த பேபி ஸ்ட்ரோலர் டிசைன் பண்ணவே கரெக்டா 2 வருஷம் ஆகியிருக்கு.  கரெக்டா 500 பேபி ஸ்ட்ரோலர் மட்டும் தான் உற்பத்தி பண்ணிருக்காங்க. அதனால முதல்ல வர்றவங்களுக்கு, புக் பண்ணவங்களுக்கு மட்டும் தான் கிடைக்கும். இப்போதைக்கு இந்த பேபி ஸ்ட்ரோலர் லண்டன்ல மட்டும் தான் கெடைக்கும். சீக்கிரமே இந்தியாவுக்கும் வந்துடும்.

ரூ.49,999 இருந்தால் போதும்.. எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை அதிரடி குறைப்பு..

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ரூ.1.76 லட்சம் தள்ளுபடியில் ஹோண்டா எலிவேட்.. இந்த ஆண்டின் மிகப்பெரிய தள்ளுபடி.!
ரூ.85,000 வரை சேமிக்கலாம்.. ரூ.6 லட்சத்திற்குள் ஹூண்டாய் காரை வாங்கலாம்.!