இந்தியாவுக்கு வருகிறது ஈ-ஏர் டாக்ஸி! டிராபிக் ஜாமுக்கு இதுதான் தீர்வு! 90 நிமிட பயணம் இனி 7 நிமிடத்தில்!

By SG Balan  |  First Published Nov 9, 2023, 9:33 PM IST

டெல்லியில் காரில் 60 முதல் 90 நிமிடங்கள் எடுக்கும் பயணத்தை, பறக்கும் டாக்ஸியில் சுமார் 7 நிமிடங்களில் மேற்கொள்ளலாம். சரக்கு, தளவாடங்கள், மருத்துவம், மற்றும் அவசரகால சேவைகளுக்கும் பயன்படுத்தலாம்.


இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமான இண்டிகோவை ஆதரிக்கும் இன்டர்குளோப் எண்டர்பிரைசஸ் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த ஆர்ச்சர் ஏவியேஷன் ஆகியவை 2026ஆம் ஆண்டில் இந்தியாவில் முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும் ஏர் டாக்ஸி சேவையைத் தொடங்க உள்ளன.

இவ்விரு நிறுவனங்களும் தேவையான அனுமதிகளைப் பெற்ற பின், இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஏர் டாக்ஸிகளை இயக்கத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெருநகரங்களில் உள்ள கடுமையான சாலைப் போக்குவரத்து நெரிசல் மற்றும் அதிகரித்து வரும் மாசுபாட்டுக்கு இந்த எலெக்ட்ரிக் ஏர் டாக்ஸி சேவை தீர்வாக இருக்கும் என்று கருதப்படுகிறது. கொண்டுள்ளது .

Tap to resize

Latest Videos

ஆர்ச்சர் ஏவியேஷன், நிறுவனம் போயிங் மற்றும் யுனைடெட் ஏர்லைன்ஸ் போன்ற விமான நிறுவனங்களின் ஆதரவுடன், மின்சாரத்தில் இயக்கும் விமானங்களை (eVTOL) உருவாக்கி வருகிறது. இந்த ஏர் டாக்ஸிக்கள் எதிர்கால நகர்ப்புற போக்குவரத்திற்கான முக்கிய வாகனமாக இருக்கும் என்று வல்லுநர்கள் கணிக்கின்றனர்.

ஒரு காருக்குள் இத்தனை வசதியா! EV மார்க்கெட்டில் மிரட்டலான என்டரி கொடுத்த லோட்டஸ்!

இதுபோன்ற 'மிட்நைட்' இ-விமானங்கள் நான்கு பயணிகள் மற்றும் ஒரு பைலட்டுடன் சுமார் 161 கிலோமீட்டர்கள் தூரம் பயணம் செய்யக்கூடியவை. இந்தச் சேவை 200 ஏர் டாக்ஸிகளுடன் தலைநகர் டெல்லி, மும்பை மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களில் முதலில் பயன்பாட்டுக்கு வரும் என்று சொல்லப்படுகிறது.

எடுத்துக்காட்டாக, டெல்லியில் காரில் 60 முதல் 90 நிமிடங்கள் எடுக்கும் பயணத்தை, பறக்கும் டாக்ஸியில் சுமார் 7 நிமிடங்களில் மேற்கொள்ளலாம் என்று இந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. சரக்கு, தளவாடங்கள், மருத்துவம், மற்றும் அவசரகால சேவைகளுக்கும் எலெக்ட்ரிக் ஏர் டாக்ஸிகளை பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

முன்னதாக, ஆறு மிட்நைட் ஏர் டாக்ஸிக்களை வழங்குவதற்காக ஜூலை மாதம் அமெரிக்க விமானப்படையுடன் ஆர்ச்சர் நிறுவனம் 142 மில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. கடந்த அக்டோபரில் ஐக்கிய அரபு அமீரகத்திலும் ஏர் டாக்ஸி சேவையைத் தொடங்குவதாக அறிவித்துள்ளது.

XUV400 காருக்கு ரூ.3.5 லட்சம் தள்ளுபடி! நம்பமுடியாத சலுகைகளை வாரி வழங்கும் மஹிந்திரா!

click me!