MS Dhoni : உலகம் முழுவதும் கொண்டாடப்படும் ஒரு இந்திய கிரிக்கெட் வீரர் தான் எம்எஸ் தோனி. உலகக் கோப்பை வென்ற முன்னாள் இந்திய கேப்டன் மற்றும் மிகவும் வெற்றிகரமான ஐபிஎல் வீரர்களில் ஒருவரான இவர், சமூக ஊடக தளங்களில் ஏராளமான ரசிகர்களை கொண்டவராவார்.
தோனி எந்த அளவிற்கு ஒரு சிறந்த கிரிக்கெட் வீரரோ, அதே அளவிற்கு மிகசிறந்த பைக் லவ்வராகவும் திகழ்ந்து வருகின்றார். ‘கேப்டன் கூல்’ எம்.எஸ். தோனி சில அரிய மற்றும் கவர்ச்சியான பைக் மாடல்களுடன் கூடிய பிரம்மாண்டமான பைக் கலெக்ஷன் வைத்திருப்பதன் காரணமாக பல வாகன ஆர்வலர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் அவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வழக்கமான பயிற்சியின் போது தோனி தனது பைக்கில் அடிக்கடி பயணிப்பதைக் நம்மால் காணமுடிகிறது. இந்நிலையில் தீபாவளி திருநாளை முன்னிட்டு, புதிய பைக்கைப் பெற்றுள்ளார் MS தோனி. அவர் வாங்கியுள்ள புதிய கஸ்டம் மேட் பைக் தான் Jawa 42 Bobber. ஏற்கவே அவர் கலெக்ச்சனை அலங்கரிக்கும் விதத்தில் இந்த புதிய பைக்கை வாங்கியுள்ளார்.
இந்தியாவின் விலை உயர்ந்த காரை பரிசாக பெற்ற நீட்டா அம்பானி.. அதன் மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?
இந்தியாவில் ஜாவா 42 பாபர் விலை சுமார் ரூ. 2.25 லட்சத்தில் தொடங்குகிறது (எக்ஸ்-ஷோரூம்) மற்றும் தோனி வைத்துள்ளது கஸ்டம் மேட் என்பதால் அதன் விலை இன்னும் அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. MS தோனிக்கு சொந்தமான இந்த புதிய Jawa 42 Bobber ஆனது, எரிபொருள் டேங்கில் தங்கப் பின்னல்களைக் கொண்ட தனித்துவமான பச்சை நிற பெயிண்ட் பெற்றுள்ளது.
அண்ணன் வரார் வழிவிடு.. கவாஸாகி நிஞ்ஜா 500, Z 500 வெளியீடு - இந்தியாவிற்கு எப்போ வருகிறது?
MS தோனியின் புதிய Jawa 42 Bobber ஆனது 29.5 bhp ஆற்றலையும் 32.74 Nm உச்ச முறுக்குவிசையையும் உற்பத்தி செய்யும். 334 cc சிங்கிள் சிலிண்டர், திரவ-குளிரூட்டப்பட்ட எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இந்த இன்ஜின் 6-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. 18-இன்ச் முன் சக்கரம் மற்றும் 17-இன்ச் பின்புற சக்கரத்துடன், இது ஒரு நிலையான பாதுகாப்பு அம்சமாக இரட்டை-சேனல் ABS உடன் வருகிறது.