இந்தியாவின் மிட்-சைஸ் எஸ்யூவி பிரிவில் ஹூண்டாய் கிரெட்டா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறது. மார்ச் 2025ல் 18,059 யூனிட்கள் விற்பனையாகி மஹிந்திரா ஸ்கார்பியோ, மாருதி கிராண்ட் விட்டாரா உள்ளிட்ட போட்டியாளர்களை பின்னுக்குத் தள்ளியுள்ளது.
இந்தியாவின் மிட்-சைஸ் எஸ்யூவி பிரிவில் ஹூண்டாய் கிரெட்டா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறது. கடந்த மாத விற்பனையில் முதல் 10 இடங்களில் கிரெட்டா முதலிடத்தில் உள்ளது. ஹூண்டாய், மஹிந்திரா, மாருதி, கியா, டொயோட்டா, டாடா, ஹோண்டா, ஃபோக்ஸ்வேகன் உள்ளிட்ட நிறுவனங்களின் எஸ்யூவிகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. ஹூண்டாய் கிரெட்டா, மஹிந்திரா ஸ்கார்பியோ, மாருதி கிராண்ட் விட்டாரா ஆகியவை அதிகம் விற்பனையாகும் மூன்று மாடல்கள்.
மார்ச் 2025ல் 18,059 கிரெட்டாக்கள் விற்பனையாகியுள்ளன. மார்ச் 2024ல் 16,458 யூனிட்கள் விற்பனையானதோடு ஒப்பிடுகையில் இது 10% வளர்ச்சி. மஹிந்திரா ஸ்கார்பியோ 13,913 யூனிட்கள் விற்பனையாகி உள்ளது (மார்ச் 2024ல் 15,151 யூனிட்கள்). இது 8% சரிவு. மாருதி கிராண்ட் விட்டாரா 10,418 யூனிட்கள் விற்பனையாகி உள்ளது (மார்ச் 2024ல் 11,232 யூனிட்கள்). இது 7% சரிவு.
மஹிந்திரா XUV700 6,851 யூனிட்கள் விற்பனையாகி உள்ளது (மார்ச் 2024ல் 6,611 யூனிட்கள் - 4% வளர்ச்சி). கியா செல்டோஸ் 6,525 யூனிட்கள் விற்பனையாகி உள்ளது (மார்ச் 2024ல் 7,912 யூனிட்கள் - 18% சரிவு). டொயோட்டா ஹாரியர் 5,286 யூனிட்கள் விற்பனையாகி உள்ளது (மார்ச் 2024ல் 5,965 யூனிட்கள் - 11% சரிவு). டாடா கர்வ் 3,785 யூனிட்கள் விற்பனையாகி உள்ளது.
ஹோண்டா எலிவேட் 2,475 யூனிட்கள் விற்பனையாகி உள்ளது (மார்ச் 2024ல் 3,277 யூனிட்கள் - 24% சரிவு). ஃபோக்ஸ்வேகன் டைகன் 1,590 யூனிட்கள் விற்பனையாகி உள்ளது (மார்ச் 2024ல் 1,588 யூனிட்கள் - 0.13% வளர்ச்சி). டாடா சஃபாரி 1,415 யூனிட்கள் விற்பனையாகி உள்ளது (மார்ச் 2024ல் 2,063 யூனிட்கள் - 31% சரிவு).