ஹீரோ புதிய பைக் ரூ.90,000-க்கு குறைவான விலையில்.. இனி மைலேஜ் பிரச்சனை இல்லை

Published : Aug 20, 2025, 04:02 PM IST
2025 Hero Glamour X

சுருக்கம்

Hero MotoCorp நிறுவனம் புதிய 2025 Hero Glamour X பைக்கை ரூ.89,999 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. H-வடிவ LED ஹெட்லாம்ப், Cruise Control, மூன்று ரைடிங் மோட்கள் போன்ற அம்சங்களுடன் வசதியான பயண அனுபவத்தை வழங்குகிறது.

நீண்டநாள் காத்திருந்த நிலையில், Hero MotoCorp இந்திய சந்தையில் தனது புதிய ஹீரோ கிளாமர் எக்ஸ் (2025 Hero Glamour X) பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக்கின் ஆரம்ப விலை ரூ.89,999 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிரம் மற்றும் டிஸ்க் என இரண்டு வெரியண்ட்களில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், டிஸ்க் மாடலின் விலை ரூ.99,999 ஆகும். ஆகஸ்ட் 20 முதல் இந்த பைக்கிற்கான புக்கிங் தொடங்கும்.

புதிய ஸ்டைல் & டிசைன்

இந்த பைக் ஸ்டைல், டெக்னாலஜி, கம்ஃபர்ட், பெர்ஃபார்மன்ஸ் என நான்கு அம்சங்களை மையமாக வைத்துள்ளது. H-வடிவ LED ஹெட்லாம்ப், டெய்ல்லாம்ப், டர்ன் இன்டிகேட்டர் ஆகியவை பைக்கிற்கு தனித்துவமான லுக் கொடுக்கின்றன. அகலமான ஹேண்டில், வசதியான பில்லியன் சீட், 790 மிமீ சீட் உயரம் மற்றும் 170 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் ஆகியவை நகர மற்றும் ஹைவே பயணத்திற்கும் சிறந்தது அனுபவத்தை தருகின்றன.

குரூஸ் கண்ட்ரோல் உடன் வரும் பைக்

இந்த பைக்கின் முக்கிய சிறப்பம்சங்களில் Cruise Control, Ride-by-Wire Technology, Electronic Throttle Body போன்றவை அடங்கும். நவீன பைக்குகளில் கிடைக்காத கிக் ஸ்டார்ட் வசதியும் இதில் வழங்கப்பட்டுள்ளது. அவசர நிலைகளில் உதவும் Panic Brake Alert மற்றும் ஒளி தன்னிச்சையாக மாறும் Ambient Light Sensor வசதியும் உள்ளது.

பிரீமியம் டிஜிட்டல் அம்சங்கள்

60-க்கும் மேற்பட்ட LCD டிஸ்ப்ளே அம்சங்கள் இதில் வழங்கப்பட்டுள்ளன. அவற்றில் டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், ரைடு மோட் தேர்வு, கியர் இன்டிகேட்டர், டிஸ்டன்ஸ்-டு-எம்ப்டி, i3s ஆன்/ஆஃப் இன்டிகேட்டர், க்ரூஸ் மோட் நிலை ஆகியவை அடங்கும். கூடுதலாக, சீட்டின் கீழ் சிறிய ஸ்டோரேஜ், Type-C USB சார்ஜிங் போர்ட்கள் ஆகியவை பயணத்தில் மொபைல் சார்ஜ் செய்ய உதவுகின்றன.

மூன்று ரைடிங் மோட்கள்

இந்த பைக்கில் 125cc, Air-Cooled, 4-Stroke Fuel Injection Engine பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 8,250 RPM-ல் 11.4 bhp பவரையும், 6,500 RPM-ல் 10.5 Nm டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. Balance Shaft மற்றும் Silent Cam Chain ஆகியவை வைப்ரேஷனை குறைத்து ஸ்மூத் ரைடிங் அனுபவத்தை தருகின்றன. 

புதிய Hero Glamour X-ல் Eco, Power, Road என மூன்று ரைடிங் மோட்கள் உள்ளன. பாஸ் சவுண்ட் கொண்ட எக்ஸாஸ்ட் பைக்கிற்கு பிரீமியம் உணர்வை தருகிறது. ஹீரோவின் AERA Technology மூலம் சிறந்த டிராட்டில் ரெஸ்பான்ஸ் கிடைக்கிறது.

நிற வகைகள்

இந்த பைக் மொத்தம் 5 கலர்களில் கிடைக்கிறது. குறைந்த விலையில் அதிக அம்சங்களுடன் Hero Glamour X, 125cc செக்மென்ட்டில் கேம்-செஞ்சர் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தினசரி பயணத்துக்கும், லாங் ரைட்ஸுக்கும் பொருத்தமாக இருப்பதால், மைலேஜ் + கம்பர்ட் தேடும் பயணிகளுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ரூ.13,300 மதிப்புள்ள இலவச ஆக்சஸரீஸ்.. Scrambler 400 X வாங்குபவர்களுக்கு ஃப்ரீ..!
30 நிமிடத்தில் 70% சார்ஜ்.. குடும்பங்களுக்கான 7 சீட்டர் EV.. VinFast புதிய மாடல்!