புதிய பைக்கை களமிறக்கும் Hero.. ஸ்டைலாக வருகின்றது "Mavrick" - லாஞ்சு டேட் இதுதான் - விலை மற்றும் ஸ்பெக் இதோ!

By Ansgar R  |  First Published Jan 11, 2024, 8:53 PM IST

Hero MotoCorp Mavrick : பிரபல Hero MotoCorp நிறுவனம் விரைவில் வெளியாகவிருக்கும் அதன் முன்னணி மோட்டார்சைக்கிளின் பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஹீரோ நிறுவனம் அதற்கு 'மேவரிக்' என்று பெயரிட்டுள்ளது. 


ஹீரோ நிறுவனம் சமீபத்தில் Mavrick மற்றும் Hurikan ஆகிய இரண்டு பெயர்களை வர்த்தக ரீதியாக முத்திரையிட்டது (Trademarked) குறிப்பிடத்தக்கது. பிரபல Harley-Davidson X440 போன்று அதே தளத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்திய பிராண்டின் பதிப்பாக அமைக்கப்பட்டுள்ளது இந்த Mavrick. இந்த சூழலில் Hero Mavrick 440க்கான வெளியீட்டுத் தேதி ஜனவரி 23, 2024 அன்று திட்டமிடப்பட்டுள்ளது.

வெளியான அறிக்கையின்படி, கடந்த ஆண்டு Hero MotoCorp உடன் இணைந்து ஹார்லியின் மிகவும் சிக்கனமான மோட்டார் சைக்கிள் அறிமுகப்படுத்தப்பட்டது. வரவிருக்கும் ஹீரோ மேவ்ரிக், ட்ரெல்லிஸ் ஃப்ரேம் மற்றும் 440 சிசி ஆயில்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் எஞ்சின் போன்ற ஒரே மாதிரியான அடிப்படை கூறுகளைப் பகிர்ந்துகொள்ளும். இருப்பினும், அதன் அமெரிக்க பதிப்பிலிருந்து தன்னை வேறுபடுத்திக் கொள்ள இது பல மாற்றங்களுக்கு உட்படும்.

Tap to resize

Latest Videos

இந்தியாவின் விலை மலிவான ஆட்டோமேட்டிக் கார்.. அறிமுகப்படுத்திய ரெனால்ட்.. எவ்வளவு தெரியுமா?

Harley X440க்கு மாறாக, அதில் உள்ள USD ஃபோர்க்குகளுக்குப் பதிலாக telescopic முன் ஃபோர்க்குகளை ஹீரோ அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹார்லியின் ரெட்ரோ பாணியுடன் ஒப்பிடும்போது இந்த புதிய ஹீரோ பைக்கின் ஒட்டுமொத்த வடிவமைப்பும்  சமீபத்திய ஸ்டைலில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

புதிய ஹீரோ மாடல்களுடன் ஒத்துப்போகும் H-வடிவ LED டேடைம் ரன்னிங் லைட்ஸ் (DRL) கொண்ட வட்ட வடிவ ஹெட்லேம்பை இதில் எதிர்பார்க்கலாம். X440ல் உள்ள 19 அங்குல முன் சக்கரத்திற்கு மாறாக, மோட்டார்சைக்கிளில் முன் மற்றும் பின்புறம் 17 இன்ச் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டிருக்கும். ஹார்லி ஒரு ரோட்ஸ்டர் என வகைப்படுத்தப்பட்டாலும், வரவிருக்கும் மாவ்ரிக் ஒரு Street Fighter என்பதை கவனத்தில்கொள்ள வேண்டியது அவசியம்.

அதே நேரத்தில் இதில் HDயின் X440 ஐ விட கவர்ச்சிகரமான தோற்றத்தை கொண்டிருக்கும் என்று பைக் விரும்பிகள் கூறுகின்றனர். கூடுதலாக, ஹீரோ மேவ்ரிக் புளூடூத் இணைப்பைத் தக்கவைத்து, ஸ்மார்ட்போன் ஒருங்கிணைப்பு மூலம் இணைக்கப்பட்ட அம்சங்களை கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்டுகிறது. harley davidson x440 சுமார் 2.39 லட்சம் முதல் விற்பனையாகி வந்த நிலையில், இந்த புதிய Mavrick அதைவிட சற்று விலை குறைவாகத்தான் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ரூ.1.32 கோடி விலையில் அறிமுகமான 2024 Mercedes-Benz GLS - எப்படி இருக்கு? சிறப்பு அம்சங்கள் என்ன?

click me!