முதல் முறையாக ராயல் என்ஃபீல்டு எலெக்ட்ரிக் பைக்! டிசைன் ரெடி... ரீலீஸ் எப்போ தெரியுமா?

By SG Balan  |  First Published Jul 10, 2024, 5:05 PM IST

ராயல் என்ஃபீல்டு எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் 'எலக்ட்ரிக்01' என்று பெயரிடப்படலாம் என்று சொல்லப்படுகிறது. 2026ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சந்தையில் அறிமுகமாகலாம்.


ராயல் என்ஃபீல்டின் முதல் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளின் டிசைன் வெளியாக இருக்கிறது. இந்த மின்சாரத்தில் இயங்கும் முதல் ராயல் என்ஃபீல்டு பைக் 2026ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

350-700 சிசி பிரிவில் முன்னணியில் இருக்கும் ராயல் என்ஃபீல்டு இன்னும் எலெக்ட்ரிக் மாடலில் கிடைக்கவில்லை. ஆனால் தற்போது, ​​நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளின் வடிவமைப்பிற்கான காப்புரிமை படம் வெளியாகி உள்ளது. இந்த டிசைன் தனித்துவமான, பாபர் பாணி ரெட்ரோ வடிவமைப்பைக் கொண்டதாக இருக்கிறது.

Latest Videos

undefined

டிசைன் பேட்டன்ட் படத்தில் இருந்து ராயல் என்ஃபீல்டு எலெக்ட்ரிக் பைக் பற்றிய சில விவரங்களை அறிய முடிகிறது. முன்புறத்தில் விசாலமான இடத்தைக் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. பேட்டரி பேக்கும் மோட்டாரும் ஒருங்கிணைக்கப்பட்டது போலவும் தெரிகிறது. பின் சக்கரம் பெல்ட் டிரைவ் வழியாக இயக்கப்படுகிறது.

3 வருஷமா அதிரி புதிரி சேல்ஸ்... XUV700 AX7 எஸ்யூவி கார் குறித்து முக்கிய அப்டேட் கொடுத்த மஹிந்திரா!

படத்தில் ஒரே இருக்கையை மட்டும் காட்டுகிறது. ஆனால், பக்கவாட்டில் Saree Guard இருப்பதால் பின்னால் ஒருவர் அமரும் வகையில் ஒரு இருக்கையும் இருக்கும் எனக் கணிக்க முடிகிறது.

டிசைன் பேட்டன்ட் படத்தில் மிகவும் சுவாரஸ்யமான விவரம் ஒன்றும் காணப்படுகிறது. 100 ஆண்டுகளுக்கு முன்பு மோட்டார் சைக்கிள்களில் பயன்படுத்தப்பட்ட கர்டர் ஃபோர்க் இந்த பைக்கில் பயன்படுத்துவதை டிசைன் பேட்டன்ட் படம் காட்டுகிறது. ஆனால், நிச்சயம் அதில் ஏதாவது ஒரு நவீன அம்சம் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

பின்பகுதியில் அலுமினியம் ஸ்விங்ஆர்ம் இருக்க வாய்ப்புள்ளது. மோனோஷாக் நேர்த்தியாக மறைவாக வைக்கப்பட்டிருக்கலாம். மோட்டார்சைக்கிளில் உள்ள டயர்கள் மெல்லியதாகத் தெரிகிறது. இது ரோலிங் திறன் மற்றும் வேகத்தை அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.

ஆனால், இப்போதே எதையும் உறுதியாகச் சொல்ல முடியாது. இந்த பைக்கில் உள்ள அம்சங்கள் என்னென்ன என்பது போகப்போகத் தெரியவரும். இந்த மோட்டார் சைக்கிள் 'எலக்ட்ரிக்01' என்று பெயரிடப்படலாம் என்று சொல்லப்படுகிறது. இன்னும் ஓராண்டு அல்லது ஒன்றரை ஆண்டுகளில் உற்பத்திக்கு வந்து 2026ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சந்தையில் அறிமுகமாகலாம் என்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

போலீஸ் இருக்காங்க.. பாத்து போங்க.. டிராபிக் விதிகளை மீறுபவர்களுக்கு அலர்ட் கொடுக்கும் கூகுள் மேப்!

click me!