3 வருஷமா அதிரி புதிரி சேல்ஸ்... XUV700 AX7 எஸ்யூவி கார் குறித்து முக்கிய அப்டேட் கொடுத்த மஹிந்திரா!

Published : Jul 09, 2024, 11:06 PM IST
3 வருஷமா அதிரி புதிரி சேல்ஸ்... XUV700 AX7 எஸ்யூவி கார் குறித்து முக்கிய அப்டேட் கொடுத்த மஹிந்திரா!

சுருக்கம்

மஹிந்திரா XUV700 காரின் புதிய ஆரம்ப விலை ரூ.19.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆக இருக்கும் என மஹிந்திரா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த விலை ஜூலை 10, 2024 முதல் நான்கு மாதங்களுக்கு மட்டுமே பொருந்தும்.

மஹிந்திரா XUV700 2021ஆம் ஆண்டில் இந்திய கார் சந்தையில் நுழைந்தது. 3 ஆண்டுகளுக்குள் விரைவாகவே 2 லட்சம் யூனிட் விற்பனையை எட்டி இருக்கிறது. இதனால் XUV700 காரின் 3வது ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, டாப்-ஆஃப்-லைன் AX7 டிரிம் மாடலின் விலையைக் குறைத்துள்ளது.

இதனால் புதிய ஆரம்ப விலை ரூ.19.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆக இருக்கும் என மஹிந்திரா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த விலை ஜூலை 10, 2024 முதல் நான்கு மாதங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் கூறியுள்ளது.

மஹிந்திரா ஏற்கனவே இந்த எஸ்.யூ.வி.க்கு டீப் ஃபாரஸ்ட் மற்றும் பர்ன்ட் சியன்னா என இரண்டு புதிய கலர் வேரியண்ட்களை வெளியிட்டது.

AX7 மேம்பட்ட பாதுகாப்பிற்கான அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோலுடன் கூடிய ADAS லெவல் 2, சோனியின் 12 ஸ்பீக்கர்கள் கொண்ட 3D ஆடியோ, லெதரெட் இருக்கைகள், ஃப்ளஷ்-வகை கதவு கைப்பிடிகள், உள்ளிட்ட அதிநவீன அம்சங்களுடன் வருகிறது. இன்ஃபோடெயின்மென்ட் யூனிட் மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டருக்காக 10.25 டிஸ்ப்ளேக்கள் கொண்ட இரட்டை ஹெச்.டி. ஸ்கிரீன் இருக்கிறது.

AX5 செலக்ட், MX 7-சீட்டர் மற்றும் பிளேஸ் (Blaze) எடிஷன் போன்ற புதிய வேரியண்ட்களையும் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டன. இப்போது மஹிந்திரா XUV700 காரை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு 9 வகையான வேரியண்ட்கள் உள்ளன. ஒவ்வொரு மாடலும் வெவ்வேறு தேவைக்கு ஏற்ற வசதிகளை உள்ளடக்கி இருக்கின்றன.

XUV700 காரின் பவர்டிரெய்ன் ஆப்ஷன்களைப் பொறுத்தவரை 2.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் அல்லது 2.2 லி mHawk ஆயில் பர்னர் ஆகியவை உள்ளன. இந்த இரண்டுமே 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோ டிரான்ஸ்மிஷனுடன் வருகின்றன. டீசல்-ஆட்டோ டிரான்ஸ்மிஷன் வேரியண்ட்டை AWD லேஅவுட்டிலும் வாங்கலாம். ஆட்டோமேட்டிக் டிரிம்ஸ் ஸ்டீயரிங்கில் பெடல் ஷிஃப்டர்களுடன் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Electric Scooter: எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கப் போறீங்களா? இந்த விஷயங்களை செக் பண்ணலைனா சிக்கல்தான்..
Yamaha R15 vs KTM RC 160.. எந்த ஸ்போர்ட்ஸ் பைக் மாஸ் தெரியுமா? முழு விபரம் இதோ