விவசாயி உருவாக்கிய எலெக்ட்ரிக் பைக்! 10 ரூபாயில் 50 கி.மீ. மைலேஜ்!!

By SG Balan  |  First Published Nov 3, 2024, 11:43 AM IST

ஃபரூகாபாத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர், மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கில், தனது பழைய பைக் மற்றும் குப்பைப் பொருட்களைப் பயன்படுத்தி குறைந்த செலவில் மின்சார பைக்கை உருவாக்கியுள்ளார். ரூ.30,000-35,000 செலவில் தயாரிக்கப்பட்ட இந்த பைக், ஒரு முறை சார்ஜ் செய்தால் 50 கி.மீ தூரம் வரை செல்லும்.


மாசு மற்றும் பணவீக்கம் ஆகியவை எதிர்காலத்தில் இரண்டு பெரிய பிரச்சனைகளாகும். அதைக் கட்டுப்படுத்த, உலக நாடுகள் மின்சார வாகனங்கள் தயாரிப்பையும், சூரிய சக்தி பயன்பாட்டையும் ஊக்குவித்து வருகின்றன. இ-பைக்குகளுக்கான பேட்டரிகள் தயாரிப்பதால் ஏற்படும் மாசு இதன் பக்க விளைவுகளில் ஒன்றாகும். ஆனால் மின்சார வாகனங்கள் புகையை வெளியிடாதவை என்பதால் சூழலுக்கு ஏற்றவையாகக் கருதப்படுகின்றன.

இந்நிலையில் விவசாயி ஒருவர் குறைந்த செலவில் இ-பைக்கை தயாரித்துள்ளார். உ.பி.யில் ஃபரூகாபாத்தைச் சேர்ந்த விவசாயி அதிகரித்து வரும் மாசுபாடு குறித்து கவலை அடைந்து சொந்தமாக எலெக்ட்ரிக் பைக்கை உருவாக்கியுள்ளார். தனது பழைய பைக்கின் பாகங்கள் மற்றும் குப்பைப் பொருட்களுடன் சில புதிய உதிரி பாகங்களைச் சேர்ந்து இந்த எலக்ட்ரிக் பைக்கை தயாரித்திருக்கிறார்.

Latest Videos

undefined

இந்த ஸ்கூட்டர் சுமார் ரூ.10 செலவில் 50 கி.மீ தூரம் ஓடுகிறது. 16 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய பழைய பைக்கை எலக்ட்ரிக் பைக்காக மாற்றியுள்ளார் இந்த விவசாயி. இந்த பைக்கை தயாரிக்க ஆன செலவு ரூ.30,000-35,000 மட்டுமே.

இ-பைக்கைத் தயாரிக்க, ஸ்ரீகாந்த் ஆன்லைனில் சில உதிரிபாகங்களை வாங்கியுள்ளார். மற்ற பாகங்கள் அவரது பழைய பைக்கில் இருந்தவைதான். ஃபரூக்காபாத்தில் உள்ள சில புகழ்பெற்ற மெக்கானிக்களுடன் கலந்தாலோசித்த பிறகு இந்த பைக் உருவாக்கும் வேலையைத் தொடங்கினார். 10 முதல் 15 நாட்கள் கடின உழைப்புக்குப் பிறகு பெட்ரோல் பைக்கை எலக்ட்ரிக் பைக்காக மாற்றினார். பெட்ரோல் பைக்கில் இருந்த எஞ்சினையே இந்த எலெக்ட்ரிக் பைக்குடன் பயன்படுத்தி இருக்கிறார். பின் சக்கரத்தில் 1,000 வாட் ஹப் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது.

ஸ்ரீகாந்த் ஃபரூகாபாத் நகரில் மாவு மில் நடத்தி வருகிறார். அவர் ஏற்கெனவே தன் வேலைக்காக பெட்ரோலில் இயங்கும் பைக்கை பயன்படுத்தி வந்தார். மாவு மற்றும் பிற பொருட்களை பைக்கில் கொண்டு செல்வார். ஒருமுறை பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது, ​​முன்னால் சென்ற ஒரு பழைய பைக் அதிக புகையை வெளியேற்றுவதைக் கண்டார். தன் பைக்கும் இதேபோல மாசுபாட்டை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து இ-பைக் தயாரிக்கும் முடிவுக்கு வந்தார்.

இப்போது அவரிடம் இருக்கும் எலெக்ட்ரிக் பைக்கை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால், மணிக்கு 50 கிமீ வேகத்தில் 50 கிமீக்கு மேல் இயங்கும். இந்த பைக்கை இப்போது பெட்ரோல், பேட்டரி இரண்டிலும் இயக்க முடியும். இந்த இ-பைக்கில் 3 குவிண்டால் எடை வரை சுமந்து செல்லலாம் என்று ஶ்ரீகாந்த் சொல்கிறார்.

click me!