குடும்பத்திற்கு ஏற்ற ரூ.5 லட்சத்தில் சிறந்த மைலேஜ் பட்ஜெட் கார்கள்!

By Dhanalakshmi G  |  First Published Nov 1, 2024, 9:20 AM IST

இந்த தீபாவளிக்கு குடும்பத்துடன் கொண்டாட, ரூ. 5 லட்சத்துக்குள் சிறந்த மைலேஜ், குறைந்த பராமரிப்பு மற்றும் நேர்த்தியான வடிவமைப்புகளுடன் கூடிய கார்கள் விற்பனையில் உள்ளன. ஆல்டோ K10, டியாகோ, க்விட், S-Presso, சான்ட்ரோ போன்ற கார்கள் சிறந்த தேர்வாக இருக்கும்.


இந்த தீபாவளிக்கு கூடுதல் சிறப்பம்சமாக குடும்பமே கொண்டாடும் வகையில் ரூ. 5 லட்சத்துக்கும் குறைவான சிறந்த கார்கள் விற்பனைக்கு வந்துள்ளன. குறைந்த பட்ஜெட்டில் சிறந்த கார் வாங்க நினைப்பவர்களுக்கு இது உகந்த தருணம். சிறந்த மைலேஜ், குறைந்த பராமரிப்பு மற்றும் நேர்த்தியான வடிவமைப்புகளை வழங்கும் சில அருமையான சிறப்பம்சங்களைக் கொண்ட கார்களை இங்கே பார்க்கலாம்.

மாருதி சுஸுகி ஆல்டோ கே10
விலை: ரூ. 4 - ரூ. 5.35 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)
மைலேஜ்: 33.85 kmpl வரை
எஞ்சின்: 1.0 லிட்டர் பெட்ரோல்
செயல்திறன்,  அழகான டிசைனுக்கு பெயர் பெற்ற ஆல்டோ கே10, போக்குவரத்து நெரிசலில் எளிதில் செல்லக்கூடிய சிறிய, எரிபொருள் திறன் கொண்ட கார். நகர்ப்புற ஓட்டுநர்களுக்கு ஏற்றது. விசாலமான உட்புறம் மற்றும் குறைந்த இயங்கும் செலவுகளுடன், குறைந்த பட்ஜெட் கொண்ட குடும்பத்தினருக்கு, முதல் முறையாக கார் வாங்கும் குடும்பத்தினருக்கு ஏற்ற தேர்வாகும். 

Tap to resize

Latest Videos

undefined

டாடா டியாகோ
விலை: சுமார் ரூ. 5 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)
மைலேஜ்: 28.06 kmpl வரை
எஞ்சின்: 1.2 லிட்டர் பெட்ரோல்

கவனத்தை ஈர்க்கும் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் சக்திவாய்ந்த கட்டமைப்பை கொண்ட டாடா டியாகோ கார் ஸ்டைலில் சமரசம் செய்யாதது.  இது எரிபொருள்-திறனுள்ள எஞ்சின் கொண்டது. விசாலமான உட்புறம் மற்றும்  திடமான செயல்திறன் கொண்டது. 

ரெனால்ட் க்விட்
விலை: ரூ. 4.7 - ரூ. 5.5 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)
மைலேஜ்: தோராயமாக 22 kmpl
எஞ்சின்: 0.8 அல்லது 1.0 லிட்டர் பெட்ரோல்

இந்த காம்பேக்ட் SUV-ஆல் ஈர்க்கப்பட்ட ஹேட்ச்பேக், டச்ஸ்கிரீன் சிஸ்டம் மற்றும் ஸ்மார்ட்போன் இணைப்புடன்  ஸ்டைலை ஒருங்கிணைக்கிறது. இதன் உயர் கிரவுண்ட் கிளியரன்ஸ் இந்திய சாலைகளுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இது அதன் விலைக்கு நிறைய அம்சங்களை வழங்குகிறது. இது இந்த பண்டிகைக் காலத்தில் வந்திருக்கும் சிறந்த மதிப்புத் தேர்வாகும். 

மாருதி சுசுகி எஸ்-பிரஸ்ஸோ
விலை: ரூ. 4.26 - ரூ. 5.22 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)
மைலேஜ்: 32.73 kmpl வரை
எஞ்சின்: 1.0 லிட்டர் பெட்ரோல்

S-Presso அதன் SUV போன்ற நிலைப்பாடு மற்றும் பெப்பி செயல்திறன் ஆகிய அம்சங்களுடன் தனித்து நிற்கிறது. நகரம் மற்றும் குறுகளான சாலைகளுக்கு ஏற்றது. சிக்கனமான, அதிக இருக்கை வசதியை வழங்குகிறது.  இது இளைஞர்களுக்கு என்று வடிவமைக்கப்பட்ட வசதியான, பட்ஜெட்டுக்கு ஏற்ற விருப்பமாக அமைகிறது.

ஹூண்டாய் சான்ட்ரோ
விலை: சுமார் ரூ 4.87 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது
மைலேஜ்: தோராயமாக 30.48 kmpl
எஞ்சின்: 1.1 லிட்டர் பெட்ரோல்

சான்ட்ரோ நம்பகத்தன்மை, தரமான உட்புற டிசைன் அம்சம் கொண்டு, சிறந்த எரிபொருள் திறன் ஆகியவற்றை வழங்குகிறது. நம்பகமான பிராண்டிலிருந்து வெளி வந்திருக்கும் இந்தக் கார் வாங்குபவர்களுக்கு சிறந்த தேர்வாகும். நகரம் மற்றும் நெடுஞ்சாலைகளில் அதிக மைலேஜ் கொடுக்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. 

இந்த தீபாவளி திருநாளில் குடும்பத்தினரை மகிழ்விக்க இந்த கார்களை வாங்கலாம். சிறிய குடும்பம் கொண்டவர்களுக்கும், சிறிய பட்ஜெட்டில் வாங்க நினைப்பவர்களுக்கும் இந்த கார்கள் நல்ல தேர்வாக இருக்கும்.

click me!