ஸ்டண்ட் பிரியர்களுக்காக அளவெடுத்து செஞ்சது.. இந்தியாவில் அறிமுகமானது Ducati Hypermotard 950 - என்ன ஸ்பெஷல்?

Ansgar R |  
Published : Aug 10, 2024, 06:14 PM IST
ஸ்டண்ட் பிரியர்களுக்காக அளவெடுத்து செஞ்சது.. இந்தியாவில் அறிமுகமானது Ducati Hypermotard 950 - என்ன ஸ்பெஷல்?

சுருக்கம்

Ducati Hypermotard 950 : டுகாட்டி இந்தியா தனது இணையதளத்தில் Hypermotard 950 SPஐ இப்பொது பட்டியலிட்டுள்ளது. அதுகுறித்து இந்த பதிவில் காணலாம்.

சரி Hypermotard என்றால் என்ன?

பொதுவாக Fun விரும்பிகளை அதிகம் கவர்வது இந்த Hypermotard வகை பைக்குகள் தான். ஒரு ஸ்போர்ட்ஸ் பைக் அல்லது பொதுவான பைக்கை போல அல்லாமல், முற்றிலும் மாறுபட்ட தோற்றம் மற்றும் ஸ்பெக்ஸ் கொண்டிருக்கும் பைக்குகள் தான் Hypermotard. ஸ்டண்ட் விரும்பிகளும் இதை அதிக அளவில் வாங்கி பயன்படுத்துகின்றனர். 

Ducati Hypermotard 950 SP 

937cc என்ஜின் திறன் கொண்ட இந்த புதிய SP ஆனது Ducatiன் Hypermotard 950 வரம்பில் உள்ளதைப் போலவே மேம்பட்டது மற்றும் சில உயர்நிலை அம்சங்களுடன் வருகிறது. முன் மற்றும் பின்புறம் இரண்டிலும் ஓஹ்லின் சஸ்பென்ஷன் அளிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்ல இந்த பைக்கில் இன்னும் பல சிறப்பான விஷயங்கள் அடங்கியுள்ளது என்றே கூறலாம். 

10 லட்சம் பட்ஜெட்டில் வாங்கக்கூடிய 5 சிறந்த கார்களின் முழு லிஸ்ட் இதோ!

ஸ்டண்ட் செய்ய ஏதுவாக இந்த பைக் கூடிய வரை எடை குறைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இதன் சக்கரங்கள் அதற்கு ஏற்றார் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் எரிபொருள் இல்லாமல் சுமார் 191 கிலோ எடை கொண்டது தான் இந்த வண்டி. 14.5 லிட்டர் எரிபொருள் டேங்க் கொண்ட இந்த வண்டி, முழுமையாக எரிபொருள் நிரப்பப்பட்டால் 200 கிலோவை தாண்டி எடை கொண்டிருக்கும். 

Fun விரும்பிகளுக்கு ஏற்றவாறு இதன் இருக்கை அமைப்பும் சற்று தூக்கலாகவே இருக்கும், அதாவது 890மிமீ இருக்கை உயரம் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக வெளியான Hypermotard RVEஐ விட இந்த புதிய பைக் சுமார் 3 லட்சம் ரூபாய் விலை அதிகம். அதாவது இந்திய சந்தையில் Hypermotard 950 SPஆனது சுமார் 19.05 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகும். 

ஒட்டுமொத்த இந்தியாவே எதிர்பார்த்த சிட்ரோயன் பசால்ட் கூபே எஸ்யூவி விலை எவ்வளவு தெரியுமா?

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ரூ.1.65 லட்சம் தள்ளுபடி.. 293 கிமீ ரேஞ்ச் கொண்ட மலிவு விலை டாடா எலக்ட்ரிக் கார்
கருப்பு - தங்க நிறத்தில் மின்னும் ஸ்பெஷல் RDX எடிஷன்.. டிவிஎஸ் கொடுத்த திடீர் சர்ப்ரைஸ்