டாடா நெக்ஸான், மாருதி சுசுகி பிரெஸ்ஸா, ஹுண்டாய் வென்யூ ஆகியவற்றுக்குப் போட்டியாக வரவுள்ள புதிய சிட்ரோன் எஸ்யூவி ரூ.7 லட்சம் விலையில் வரக்கூடும்.
தற்போது பயணிகள் வாகன சந்தையில் எஸ்யூவி (SUV) கார் பிரிவின் வளர்ச்சி தொடர்கிறது. இந்தப் பிரிவின் விற்பனை வாகனச் சந்தையில் கிட்டத்தட்ட 43 சதவீதமாக உள்ளது. இதனால் மேலும் பல நிறுவனங்கள் புதிய மாடல் கார்களை அறிமுகப்படுத்த முயற்சி செய்கின்றன. சி3 ஹேட்ச்பேக், இ-சி3 எலக்ட்ரிக் ஹேட்ச்பேக் மற்றும் சி5 ஏர்கிராஸ் எஸ்யூவி ஆகிய கார்களை விற்பனை செய்யும் சிட்ரோன், தற்போது புதிய காரை அறிமுப்படுத்த இருக்கிறது.
ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி ஒரு புதிய எஸ்யூவியை அறிமுகம் செய்ய உள்ளது. புதிய சிட்ரோன் எஸ்யூவி (New Citroen SUV) கார் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான், ஹூண்டாய் வென்யூ மற்றும் கியா சோனெட் போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும். இது C3 தளத்தைக் கொண்டது.
புதிய சிட்ரோன் கார் ஆனது சிட்ரோயன் C3 ஹேட்ச்பேக் மற்றும் 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் எஞ்சின் உடையதாக இருக்கும் என்று கூறப்படுகிறது . இந்த எஞ்சின் அதிகபட்சமாக 110PS பவரையும், 190Nm உச்ச முறுக்குவிசையையும் உருவாக்குகிறது. 6-ஸ்பீடு MT மற்றும் 6-ஸ்பீடு AT டிரான்ஸ்மிஷன்களும் அடங்கும் என்றும் தெரிகிறது.
இந்தப் புதிய சிட்ரோயன் காரின் விலையைப் பொருத்தவரை, அனைத்து போட்டியாளர்களையும் பின்னுக்குத் தள்ளிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.7 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையுடன் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
சிட்ரோன் நிறுவனத்தின் மற்ற மாடல்களான C3 ரூ.6.16 லட்சம் முதல் ரூ.8.25 லட்சம் வரையிலும், E-C3 ரூ.11.50 லட்சம் முதல் ரூ.12.43 லட்சம் வரையிலும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. சிட்ரோன் நிறுவனத்தின் சிறப்பு மாடல் கார் சி5 ஏர்கிராஸ் எஸ்யூவி (C5 Aircross SUV), ரூ. 37.17 லட்சம் விலையில் உள்ளது.
குனோ பூங்காவில் 4 குட்டிகளை ஈன்ற நமீபியா சிறுத்தை! வைரலாகும் அழகிய காட்சி!