மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி, ஆல்டோ, ஈகோ, வேகன்ஆர், ஸ்விஃப்ட், டிசையர், பலேனோ, எர்டிகா, பிரீஸ்ஸா மற்றும் கிராண்ட் விட்டாரா உள்ளிட்ட சில பிரபலமான கார்களை நாட்டில் விற்பனை செய்கிறது.
மாருதி கார் வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? ஆம் எனில், இன்னம் சில தினங்களில் விலை உயரப் போகிறது. கவனத்தில் கொள்ளுங்கள். நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி, அதிக விலை அழுத்தம் காரணமாக ஏப்ரல் முதல் தனது கார்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
மாருதி நிறுவனம், விலை அதிகரிப்பு அளவை இன்னும் கண்டறிந்து கொண்டிருக்கும்போது, காரின் மாடலைப் பொறுத்து அது மாறுபடும் எனவும் தெரிவித்துள்ளது. ஆல்டோ, ஈகோ, வேகன்ஆர், ஸ்விஃப்ட், டிசையர், பலேனோ, எர்டிகா, பிரீஸ்ஸா மற்றும் கிராண்ட் விட்டாரா உள்ளிட்ட சில பிரபலமான கார்களை இந்நிறுவனம் விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
நடப்பு நிதியாண்டில் FY23 இல், மாருதி நிறுவனம் இரண்டு முறை விலை உயர்வை அறிவித்தது. கடந்த ஏப்ரல் மாதத்தில் 1.3% மற்றும் ஜனவரியில் 1.1% விலையை உயர்த்தியது.
ஒழுங்குமுறை தாக்கல் ஒன்றில், ஒட்டுமொத்த பணவீக்கம் மற்றும் ஒழுங்குமுறை தேவைகளால் ஏற்படும் செலவு அழுத்தத்தை தொடர்ந்து கண்கானித்து வருகிறோம் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
கியா செல்டோஸ், சொனெட், கேரன்ஸ்.. புது ஆப்ஷன்கள்.! அட்டகாசமான விலை.! முழு பட்டியல்
"செலவைக் குறைப்பதற்கும், விலை அதிகரிப்பை ஓரளவு ஈடுகட்டுவதற்கும் அதிகபட்ச முயற்சியை மேற்கொண்டு வருவதாகவும், அதே வேளையில், விலை அதிகரிப்பின் மூலம் சில பாதிப்புகளைக் கடந்து செல்வது கட்டாயமாகிவிட்டது" என்று மாருதி சுசுகி இந்தியா தெரிவித்துள்ளது.
RDE (real driving emission)விதிமுறைகள் ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வருவதால், பல வாகன உற்பத்தியாளர்கள் தங்கள் வாகனங்களின் விலையை உயர்த்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கியா இந்தியா சமீபத்தில் தனது RDE-இணக்கமான வாகன வரிசையை, செல்டோஸ், சோனெட் மற்றும் கேரன்ஸ் உள்ளிட்டவற்றை மேம்படுத்தப்பட்ட விலைகளுடன் அறிமுகப்படுத்தியது. ஹூண்டாய் மோட்டார் இந்தியா RDE-இணக்கமான என்ஜின்கள் கொண்ட மாடல்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது. டாடா மோட்டார்ஸ் தனது வர்த்தக வாகனங்களின் விலையை ஏப்ரல் 1 முதல் 5% வரை உயர்த்தவுள்ளது.
நாட்டின் மிகப்பெரிய இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப், அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களின் விலையை ஏப்ரல் 1 முதல் 2% வரை உயர்த்தவுள்ளது.