கீ லெஸ்-க்கு பயங்கர வரவேற்பு... ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரில் மேலும் பல அம்சங்களை சேர்க்க ஹோண்டா நிறுவனம் திட்டம்!!

By Narendran SFirst Published Mar 18, 2023, 7:28 PM IST
Highlights

ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா 6ஜி மாடல் ஸ்கூட்டரில் மேலும் பல புதிய அம்சங்களை சேர்க்க ஹோண்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 

ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா 6ஜி மாடல் ஸ்கூட்டரில் மேலும் பல புதிய அம்சங்களை சேர்க்க ஹோண்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் பைக்குகளுக்கு இணையாக ஸ்கூட்டிகளின் விற்பனையும் இருந்து வருகிறது. பைக்குகளில் மட்டும் பல அப்டேட்கள் வந்துக்கொண்டிருந்த நிலையில் சமீப காலமாக ஸ்கூட்டிகளிலும் பல அம்சங்களை அதன் தயாரிப்பு நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. அந்த வகையில் ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா ஸ்கூட்டியில் கடந்த ஜனவரி மாதம் H ஸ்மார்ட் டெக்னாலஜி கொண்ட ஸ்மார்ட் கீ வசதி கொண்ட ஸ்கூட்டர் அறிமுகப்படுத்தப்பட்டது. இது பொதுவாக கார்களில் இருக்கும் வசதி. சாவியில்லாமல் காரை ஸ்டார்ட் செய்வது.

இதையும் படிங்க: இப்படியொரு மைலேஜ் கார் இருக்கா.! எல்லா அம்சங்களிலும் தட்டி தூக்கும் மாருதி சுசுகி பிரெஸ்ஸா சிஎன்ஜி

இந்த வசதியை ஹோண்டா நிறுவனம் ஸ்கூட்டியில் கொடுத்து அசத்தியது. இந்த அப்டேட்டுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதையடுத்து, ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரில் மேலும் பல அம்சங்களை வழங்க ஹோண்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதுக்குறித்து பேசிய ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா தலைவரும் தலைமை செயல் அதிகாரியுமான அடுஷி ஒகாடா, ஆக்டிவா 6ஜி மாடலில், டிஜிட்டல் டிஸ்பிளே, ப்ளூடூத் மற்றும் H ஸ்மார்ட் கீ லெஸ் வசதி ஆகியவை அடங்கும் என ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: புது ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 விலை இவ்ளோதானா.. அப்போ எல்லாரும் வாங்கிடுவாங்க போலயே.!!

தற்போதைய மாடலில்  ஸ்பீடோமீட்டர், அனலாக் மீட்டர் மற்றும் இண்டிகேட்டர் ஆகியவற்றை பிரதிபலிக்கும் அனலாக் டிஸ்பிளே உள்ளது. புதிய அப்டேட் மூலம், நேரடி போட்டியாளரான TVS ZX SmartXonnect ஸ்கூட்டருக்கு இணையாக ஆக்டிவா 6ஜி மேம்படுத்தப்பட உள்ளது என்றார். இந்த புதிய ஆக்டிவா 6ஜி வேரியண்டின் விலை ரூ.85 ஆயிரம் முதல் ரூ.90 ஆயிரம் வரை நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இந்த வேரியண்ட் விற்பனைக்கு வரும் எனவும் கூறப்படுகிறது. ஆனால் தற்போது வரை ஆகிவா 6ஜி ஆனது ஸ்டாண்டர்ட், DLX மற்றும் H-Smart வகைகளில் வழங்கப்படும் ஸ்கூட்டிகளின் விலைகள் முறையே ரூ.74,536, ரூ.77,036 மற்றும் ரூ.80,537 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

click me!