டெல்லியில் உலகின் முதல் கிராஸ்-பிரீட் டெஸ்லா கார்! இது எலான் மஸ்குக்குத் தெரியுமா?

By SG BalanFirst Published Feb 4, 2024, 11:06 AM IST
Highlights

அஷ்னீர் குரோவரின் ட்வீட் வெளியானதில் இருந்து 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர். மூவாயிரத்திற்கும் அதிகமானவர்கள் லைக் செய்துள்ளனர்.

பாரத்பே நிறுவனத்தின் முன்னாள் தலைவர் அஷ்னீர் குரோவர் சமீபத்தில் சமூக ஊடகங்களில் பகிர்ந்த காரின் புகைப்படம் வைரலாகியுள்ளது. டெல்லியில் முதல் கிராஸ் ப்ரீட் டெஸ்லா காரைப் பார்த்தாகக் கூறி அந்தப் படத்தைப் பகிர்ந்துள்ளார்.

ட்விட்டரில் அஷ்னீர் குரோவர் பகிர்ந்துள்ள படத்தில் உள்ள கார் பி.ஒய்.டி. (பில்ட் யுவர் ட்ரீம்ஸ்) அட்டோ 3 (Atto 3), போல்டர் கிரே நிறத்தில் இருக்கிறது. இந்தக் கார் கரோல் பாக் நகரில் காணப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் அந்தக் காரின் பின்புறத்தில் "டெஸ்லா" (Tesla) என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது.

Latest Videos

இந்த ட்வீட் வெளியானதில் இருந்து 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர். மூவாயிரத்திற்கும் அதிகமானவர்கள் லைக் செய்துள்ளனர். "உலகின் முதல் கிராஸ்-பிரீட் டெஸ்லா! ஒரு டெல்லி பையன் கரோல் பாக்கில் தன் கனவை நனவாக்கிக் கொண்டிருக்கிறார்" என்று குரோவர் கூறிப்பிட்டுள்ளார்.

500 கிலோ லோடு தாங்கும் கோமாகியின் டிரைக் ஸ்கூட்டர்... இது டிவிஎஸ் எக்ஸ்எல்லையே ஓரங்கட்டும் போல...

World’s first ‘cross - breed’ Tesla ! Some Delhi boy literally ‘built his dream’ in Karol Bagh pic.twitter.com/zxuilgyvAV

— Ashneer Grover (@Ashneer_Grover)

BYD Atto 3 என்பது BYD ஆட்டோ நிறுவனத்தின் கார் ஆகும். இந்த மின்சார எஸ்யூவி காரின் விலை ரூ.33.99 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

டிசம்பரில், டெஸ்லா நிறுவனம் குஜராத்தில் முதலீடு செய்ய இருப்பதாக அமைச்சர் ஒருவர் கூறினார். குஜராத் சுகாதாரத்துறை அமைச்சர் ருஷிகேஷ் படேலிடம் இதுகுறித்து கேட்கப்பட்டபோது, "நாங்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறோம், குஜராத் அரசு மிகவும் நம்பிக்கையுடன் உள்ளது. டெஸ்லா நிறுவனர் எலோன் மஸ்க் இதில் ஆர்வமாக இருக்கிறார். அவர்கள் குஜராத்திற்கு வருவார்கள் என்று நம்புவோம்" என்று கூறினார்.

டெஸ்லா தவிர வேறு கார் உற்பத்தியாளர்களும் குஜராத்தில் தங்கள் தொழில்சாலைகளை அமைக்க திட்டங்கள் வைத்திருப்பதாகவும், மாநில அரசும் மக்களும் வணிக ரீதியான நட்புடன் இருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

பவர்ஃபுல் பேட்டரியுடன் புதிய Ola S1 X எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! 8 வருசத்துல 80,000 கி.மீ. கேரண்டி!

click me!