எம்ஜி ஹெக்டருக்கு சவால் விடும் டாடா ஹாரியர் ADAS.. பட்டையை கிளப்பும் இதன் விலை எவ்வளவு தெரியுமா?

Published : Feb 25, 2023, 09:03 PM IST
எம்ஜி ஹெக்டருக்கு சவால் விடும் டாடா ஹாரியர் ADAS.. பட்டையை கிளப்பும் இதன் விலை எவ்வளவு தெரியுமா?

சுருக்கம்

டாடா ஹாரியர் (Tata Harrier) அடாஸ் (ADAS) இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் முக்கிய அம்சங்களை பார்க்கலாம்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போதைய 2023 ஆண்டில் டாடா ஹாரியரை மேம்பட்ட ஓட்டுநர் உதவி அமைப்புடன் (ADAS) அறிமுகப்படுத்தியுள்ளது. 

புதுப்பிக்கப்பட்ட எஸ்யூவியின் விலை ரூ.15 லட்சத்தில் தொடங்கி ரூ.24.07 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், புது டெல்லி) வரை செல்கிறது. மேலும், ஹாரியர் காரின் விலை ரூ. 15 லட்சம் முதல் ரூ. 22.60 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). புதிய டாடா ஹாரியர் 2023 MG ஹெக்டர் மற்றும் ஜீப் காம்பஸுக்கு போட்டியாக தொடரும் என்று கருதப்படுகிறது.

2023 ஹாரியரில் 10 புதிய ADAS அம்சங்கள் உள்ளன. அவைகள் பின்வருமாறு, முன்னோக்கி மோதல் எச்சரிக்கை, அவசர பிரேக்கிங், உயர் பீம் உதவி, லேன் புறப்படும் எச்சரிக்கை, லேன் மாற்ற எச்சரிக்கை, பிளைண்ட் ஸ்பாட் கண்டறிதல், டோர் எச்சரிக்கை, போக்குவரத்து அறிகுறி காட்டுதல், பின்புற போக்குவரத்து எச்சரிக்கை மற்றும் பின்புற மோதல் எச்சரிக்கை ஆகியவை இடம்பெற்றுள்ளது.

360 டிகிரி கேமரா, வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் கூடிய புதிய 10.3 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் புதிய 7 இன்ச் டிஜிட்டல் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் ஆகியவை புதிய ஹாரியரில் மற்ற முக்கியமான அம்சங்களாகும். புதிய டாடா ஹாரியர் 2.0 லிட்டர் க்ரையோடெக் டீசல் எஞ்சினைப் பயன்படுத்துகிறது. 

இது உண்மையான ஓட்டுநர் உமிழ்வு (RDE) விதிமுறைகளுக்கு உட்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் E20 எரிபொருளுடன் செயல்படும் இதில், இன்ஜின் 170PS மற்றும் 350Nm உருவாக்குகிறது. மேலும் 6-ஸ்பீடு MT அல்லது 6-ஸ்பீடு AT உடன் இணைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க: இந்தியாவில் மீண்டும் களமிறக்கப்படும் Pulsar 220F... தொடங்கியது பைக்குக்கான முன்பதிவு!!

வேரியண்ட் வாரியான 2023 Tata Harrier MT விலைகள் கீழே உள்ளன (எக்ஸ்-ஷோரூம், புது டெல்லி).

XE - Rs 15 lakh

XM - Rs 16.45 lakh

XMS - Rs 17.70 lakh

XT+ - Rs 18.69 lakh

XT+ Dark - Rs 19.04 lakh

XZ - Rs 19.24 lakh

XZ Dual Tone - Rs 19.44 lakh

XZ+ - Rs 21.32 lakh

XZ+ Dual Tone - Rs 21.52 lakh

XZ+ Dark - Rs 21.67 lakh

XZ+ Red Dark - Rs 21.77 lakh

2023 டாடா ஹாரியர் AT விலைகள் (எக்ஸ்-ஷோரூம், புது டெல்லி) வகை வாரியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

XMAS - Rs 19 lakh

XTA+ - Rs 19.99 lakh

XTA+ Dark - Rs 20.34 lakh

XZA - Rs 20.54 lakh

XZA Dual Tone - Rs 20.74 lakh

XZA+ - Rs 22.62 lakh

XZA+ Dual Tone - Rs 22.82 lakh

XZA+ Dark - Rs 22.97 lakh

XZA+ Red Dark - Rs 23.07 lakh

XZA+ (O) - Rs 23.62 lakh

XZA+ (O) Dual Tone - Rs 23.82 lakh

XZA+ (O) Dark - Rs 23.97 lakh

XZA+ (O) Red Dark - Rs 24.07 lakh

இதையும் படிங்க: பாதுகாப்பு வசதியுடன் வரும் ஹாரியர் மற்றும் சஃபாரி… இந்திய சந்தையில் களமிறக்குகிறது டாடா மோட்டார்ஸ்!!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ரூ.1 லட்சம் ஆஃபர்.. டேடோனா 660-க்கு அதிரடி தள்ளுபடி.. பைக் ரசிகர்களுக்கு மாபெரும் சலுகை
51 சீட்டர் பேருந்து.. பாதுகாப்பு அம்சங்கள் அசத்துது.. கலக்கும் புதிய BharatBenz BB1924 பேருந்து