ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் அதன் 2023 வெர்னா செடான் காரின் முன்பதிவு வரும் மார்ச் 21 ஆம் தேதி முதல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் அதன் 2023 வெர்னா செடான் காரின் முன்பதிவு வரும் மார்ச் 21 ஆம் தேதி முதல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபல கார் நிறுவனமான ஹூண்டாய், இந்தியாவில் வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப கிராண்ட் ஐ10 நியோஸ், அவ்ரா போன்ற பட்ஜெட் விலை கார்களை விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில் தற்போது பிரீமியமான செடான் காரை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. வருகிற மார்ச் 21 ஆம் தேதி புதிய வெர்னா கார் அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில், இந்த காருக்கான முன்பதிவுகளும் துவங்க உள்ளன. சென்சுஅஸ் ஸ்போர்டினஸை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த கார் மிகவும் அட்வான்ஸான டிசைனில் காட்சியளிக்கிறது. குறிப்பாக, பயணத்தின்போது காற்றை கிழித்து கொண்டு செல்லும் வகையில் ஏரோடைனமிக் டிசைனில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பாதுகாப்பு வசதியுடன் வரும் ஹாரியர் மற்றும் சஃபாரி… இந்திய சந்தையில் களமிறக்குகிறது டாடா மோட்டார்ஸ்!!
undefined
6வது தலைமுறை மாடலான இந்த ஹூண்டாய் வெர்னா, முன்பக்கத்தில் இருந்து பக்கவாட்டு மற்றும் பின்பக்கம் வரையில் முற்றிலுமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதுக்குறித்து ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் உன்சூ கிம் கூறுகையில், புத்தம் புதிய ஹூண்டாய் வெர்னாவின் டிசைனை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறோம். இந்த அட்வான்ஸான தோற்றம் கொண்ட செடான் காரை அறிமுகம் செய்வதன் மூலம் வாடிக்கையாளர் அனுபவங்களை உயர்த்துவது மற்றும் இந்த பிரிவில் தேவைகளை புதுப்பிப்பதை நோக்கமாக கொண்டுள்ளோம். அதன் மாறும் விகிதாச்சாரங்கள் மற்றும் தனித்துவமான அளவுருக்கள் மூலம் புத்தம் புதிய ஹூண்டாய் வெர்னா புதிய மதிப்பை வரையறுத்து எதிர்கால அனுபவங்களுக்கு வழிவகுக்கும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: இந்தியாவில் மீண்டும் களமிறக்கப்படும் Pulsar 220F... தொடங்கியது பைக்குக்கான முன்பதிவு!!
முன்பதிவுகள் நடைபெற்று கொண்டிருப்பதால், விருப்பப்படுவோர் 2023 ஹூண்டாய் வெர்னா காரை டீலர்ஷிப் ஷோரூம்கள் மூலமாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ புக் செய்யலாம். இதற்கான டோக்கன் தொகையாக ரூ.25 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இ.எக்ஸ், எஸ், எஸ்.எக்ஸ் மற்றும் எஸ்.எக்ஸ் (ஆப்ஷ்னல்) என புதிய வெர்னா கார் மொத்தம் 4 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட உள்ளது. என்ஜின் தேர்வுகளாக புதிய 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின்கள் வழங்கப்பட உள்ளன. இதில் டர்போ பெட்ரோல் என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 7-ஸ்பீடு ட்யூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் தேர்வுகளையும், நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஐவிடி கியர்பாக்ஸ் தேர்வுகளையும் பெற முடிகிறது.