5.4 வினாடியில் 100 கி.மீ வேகத்தில் பறக்கும் பிஎம்டபிள்யூ எக்ஸ் 5 கார்! விலை எவ்வளவு தெரியுமா?

By SG Balan  |  First Published Jul 15, 2023, 10:32 AM IST

5.4 வினாடியில் 100 கி.மீ. வேகத்தில் சீறிப் பாயும் திறன் கொண்ட பிஎம்டபிள்யூ எக்ஸ் 5 (BMW X5 SUV) கார் இந்திய சந்தைக்கு விற்பனைக்கு வந்துள்ளது. ரூ.93.9 லட்சம் முதல் கிடைக்கிறது.


பிஎம்டபிள்யூ எக்ஸ் 5 எஸ்யூவி (BMW X5 SUV) கார் இந்திய சந்தைக்கு விற்பனைக்கு வந்துள்ளது. இந்த புதிய கார் பெட்ரோல் மற்றும் டீசல் வகைகளில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.93.9 லட்சத்தில் தொடங்கி ரூ.1.06 கோடி வரை செல்கிறது. புதிய X5 சென்னையில் உள்ள BMW குரூப் ஆலையில் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள அனைத்து BMW கடைகளிலும் கிடைக்கும்.

புதிய ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட பிஎம்டபிள்யூ எக்ஸ்5, நீல நிறத்துடன் கூடிய மேட்ரிக்ஸ் அடாப்டிவ் எல்இடி ஹெட் லேம்ப்களை கொண்டுள்ளது. கார் முழுவதும் அலுமினியம் டிரிம் செய்யப்பட்ட மேற்பகுதியைப் பெற்றுள்ளது. பின்புறத்தில், எல்-வடிவ எல்இடி டெயில் லேம்ப்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. 21-இன்ச் டைமண்ட்-கட் அலாய் வீல்கள் உள்ளன.

Tap to resize

Latest Videos

இந்தியாவில் டெஸ்லா கார் தொழிற்சாலை! ரூ.20 லட்சம் முதல் மின்சார கார் விற்க திட்டம்!

புதிய X5 காரின் உள் பகுதியில் 14.9 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பு உள்ளது. இதில் ஆப்பிள், ஆண்டிராய்டு, ஹர்மன் கார்டன் மியூசிக் சிஸ்டம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

காற்றோட்டமான இருக்கைகள், தானியங்கி தட்பவெப்ப கட்டுப்பாடு, பார்க்கிங் மற்றும் ரிவர்ஸ் அசிஸ்டெண்ட், சரவுண்ட் வியூ கேமரா, டிரைவ் ரெக்கார்டர் மற்றும் ரிமோட் பார்க்கிங் போன்ற இன்னும் பல வசதிகளும் இந்த பிஎம்டபிள்யூ காரில் அடங்கும்.

எலக்ட்ரானிக் மூலம் கட்டுப்படுத்தப்பட்ட டிஃபெரென்ஷியல் லாக்குகள், டிராக்ஷன் கன்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ஹில் டிசென்ட் கண்ட்ரோல், டூ-ஆக்சில் ஏர் சஸ்பென்ஷன், ஆறு ஏர்பேக்குகள், ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல், கார்னரிங் பிரேக் கன்ட்ரோல், ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலக்ட்ரிக் பார்க்கிங் பிரேக், ஐசோஃபிக்ஸ் மவுண்ட்கள் மற்றும் பல அம்சங்களும் இருக்கின்றன.

புதிய X5 இரண்டு வகை இன்ஜின்களுடன் கிடைக்கும். 3 லிட்டர், ஆறு சிலிண்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் கொண்ட வேரியண்ட் 0 முதல் 100 கிமீ வேகத்தை வெறும் 5.4 வினாடிகளில் எட்டும். மற்றொரு வேரியண்டில் உள்ள 3.0-லிட்டர், ஆறு சிலிண்டர் டர்போசார்ஜ்டு டீசல் எஞ்சின் 0 முதல் 100 கிமீ வேகத்தை வெறும் 6.1 வினாடிகளில் எட்டிவிடும்.

வாங்கத் தூண்டும் விலையில் ஹூண்டாய் எக்ஸ்டர்! டாடா பஞ்ச்க்கு சவால் விடும் அதிரடி அறிமுகம்!

click me!