வாங்கத் தூண்டும் விலையில் ஹூண்டாய் எக்ஸ்டர்! டாடா பஞ்ச்க்கு சவால் விடும் அதிரடி அறிமுகம்!

By SG Balan  |  First Published Jul 11, 2023, 6:16 PM IST

எக்ஸ்டர் காரை அறிமுகப்படுத்தியதன் மூலம் ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் இந்தியாவில் முழுமையாக கார் உற்பத்தியாளராக மாறியுள்ளது.


முதல் முறை கார் வாங்க ஆசையாக இருப்பவர்களை இலக்காகக் கொண்டு ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் இந்தியாவில் ஒரு சிறிய காரை அறிமுகப்படுத்தியுள்ளது. திங்கட்கிழமை அறிமுகமாகியுள்ள ஹூண்டாய் எக்ஸ்டர் (Exter SUV) என்ற புதிய கார் இதே விலையில் போன்ற மற்ற கார்களின் மார்க்கெட்டை தூக்கி அடிக்கும் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

எக்ஸ்டர் காரின் ஆரம்ப விலை ரூ.5.99 லட்சம். அதிகபட்ச விலை கொண்ட டாப் வேரியண்ட் விலை ரூ.9.99 லட்சம். இந்த கார் மூலம் ஹூண்டாய் நிறுவனம் தனது போட்டியாளரான டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டாடா பஞ்ச் காருக்கு சரியான போட்டியை கிளமிறக்கியுள்ளது.

Tap to resize

Latest Videos

இந்த் கார் ஹூண்டாய் நிறுவனத்திற்கு ஆரம்ப நிலை கார்கள் பிரிவில் புதிய மதிப்பை ஏற்படுத்திக் கொண்டுக்கும் வாய்ப்பு உள்ளது. இச்சூழலில் தென் கொரிய கார் நிறுவனமான  ஹூண்டாய்க்கு உற்பத்தியை விரிவுபடுத்தும் மூலதன முக்கியத்துவம் வாய்ந்த சந்தையாக இந்தியா திகழ்கிறது என அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி உன்சூ கிம் தெரிவித்துள்ளார்.

வேதாந்தாவை கைவிட்ட பாக்ஸ்கான்! திடீரென செமி கண்டக்டர் உற்பத்தி ஒப்பந்தம் முறிந்து ஏன்?

"எக்ஸ்டர் காரை அறிமுகப்படுத்தியதன் மூலம் ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் இந்தியாவில் முழுமையாக கார் உற்பத்தியாளராக மாறியுள்ளது" என்றும் கிம் கூறினார். இந்த ஹூண்டாய் எக்ஸ்டர் காரை உருவாக்க 9.5 பில்லியன் ரூபாய் செலவிட்டதாகவும் அவர் தெரிவித்திருக்கிறா்.

உலகின் மூன்றாவது பெரிய வாகன உற்பத்தி நிறுவனமான ஹூண்டாய்க்கு இந்தியாவின் முக்கியத்துவம் அதிகரித்து வருகிறத. சீனாவில் தனது இருப்பை மீண்டும் அளவிடுகிறது. ரஷ்யாவை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது.

இந்தியாவில் கார் வாங்குவோர் எஸ்யூவி கார்களை நோக்கி ஈர்க்கப்பட்டு வருகின்றனர். இதனால் கோவிட்-19 தொற்றுக்குப் பிந்தைய விற்பனை அதிகரித்துள்ளது. ஹூண்டாய் போட்டியாளரான மாருதி சுஸுகி கடந்த வாரம் உயர்மட்ட வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் பிரீமியம் காரை அறிமுகப்படுத்தியது.

2075ஆம் ஆண்டுக்குள் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா அமெரிக்காவை முந்தும்: கோல்டுமேன் சாக்ஸ் கணிப்பு

எக்ஸ்டரில் எலக்ட்ரிக் சன் ரூஃப், செல்ஃபி எடுக்க டேஷ்போர்டு கேமரா மற்றும் வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜர் போன்ற அம்சங்கள் உள்ளன. இந்த வசதிகள் எல்லாம் பெரும்பாலும் பெரிய கார் மாடல்களில் காணப்படக்கூடியவை. ஆனால், ஹூண்டாய் நிறுவனம் இந்த ஆரம்ப நிலை காரிலேயே அவற்றை உள்ளடக்கி இருக்கிறது.

ஹூண்டாய் சமீபத்திய ஆண்டுகளில் அல்கசார் மற்றும் க்ரெட்டா போன்ற பெரிய மற்றும் நடுத்தர அளவிலான SUVகளை அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த நிதியாண்டில் இந்தியாவில் 567,000 கார்களுக்கு மேல் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. இருப்பினும், அதன் சந்தைப் பங்கு 2019-2020 உச்சமான 17.5% லிருந்து 15% க்கும் கீழே சரிந்துவிட்டது. ஆனால், டாடா மற்றும் மஹிந்திரா & மஹிந்திரா கொண்டுவந்த புதிய வெளியீடுகள் வேகமாக முன்னேறி வருகின்றன.

3வது முறையாக எஸ்.கே.மிஸ்ராவின் பதவி நீட்டிப்பு சட்டவிரோதம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

click me!